பாதாள சிறையில் பாவனி, நிரூப்.. பக்காவா பிளான் போட்டு தூக்கிய அபிஷேக், பிரியங்கா.. தெறி புரமோ!

சென்னை: ஆரி அர்ஜுனன் போல வார வாரம் நிரூப் ஜெயிலுக்குள் அனுப்பப்படுகிறாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், நிரூப்புக்கு ரசிகர்கள் மத்தியில் சப்போர்ட் இல்லாததால் தொடர்ந்து கடைசி இடத்திலேயே வருகிறார் என்றும் அபிஷேக் போடும் ஸ்கெட்ச் காரணமாக அடுத்த வாரம் நிரூப் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்கள் ஒன்றாக சேர்ந்து பாவனி மற்றும் நிரூப்பை பாதாள சிறைக்குள் அடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாதாள சிறையில் பாவனி

பாதாள சிறையில் பாவனி

பிரேக்கிங் நியூஸ்க்காக பல ஐடியாக்கள் தருகிறேன் என்றும் என்னிடம் கலந்து பேசவில்லை என்றும் கோபித்துக் கொண்ட பாவனியை வைத்தே இரு அணிகளும் கிசுகிசு கன்டென்ட்டுகளை உருவாக்கி அவரை மனதளவில் விளையாட முடியாமல் டார்கெட் செய்து இந்த வாரம் பாதாள சிறைக்குள் தள்ளி விட்டனர் என பாவனி ஆர்மியினர் புலம்பி வருகின்றனர்.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

நிரூப் என் நண்பன் என மூச்சுக்கு மூவாரயிரம் தடவை சொல்லும் பிரியங்கா அபிஷேக்கின் பேச்சைக் கேட்டு நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். பிரியங்காவின் நட்பு போலித் தனமானது என்றும் தாமரையிடம் சண்டை போட்டு விட்டு சாப்பாட்டுக்காக முத்தம் கொடுப்பதும், நிரூப்புடன் சண்டை போட்டு விட்டு கட்டிப்பிடிப்பதையும் பார்த்த ரசிகர்கள் இதுதான் பிரியங்காவின் பாசிட்டிவிட்டியா? என விளாசி வருகின்றனர்.

காயின் செய்யும் வேலை

காயின் செய்யும் வேலை

காயின் வைத்திருக்கும் நிரூப் மற்றும் பாவனி இருவருமே இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபார்மர்கள் என சொல்லி பாதாள சிறைக்குள் தள்ளி விட்டனர். கேப்டனாக இந்த வாரம் இருக்கும் நிரூப் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டது அவரை வேறு மாதிரியாக வரும் வாரங்களில் இருந்தால் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Simbhu -வ மட்டும் பாராட்டாதீங்க Kalyani Transformation பத்தி தெரியுமா! | Maanadu
அபிஷேக் எஸ்கேப்

அபிஷேக் எஸ்கேப்

இந்த வாரம் அபிஷேக் ராஜா தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசியில் இருந்து வருகிறார். ஆனால், அவரை காப்பாற்ற இந்த வாரம் அபிஷேக்கை ஹைலைட் பண்ணுவது போல பிரேக்கிங் நியூஸ் கான்செப்ட் கொடுக்கப்பட்டு அவரை எஸ்கேப் செய்ய பார்க்கிறது பிக் பாஸ் குழு என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். என்ன ஆனாலும், இந்த வாரம் அபிஷேக் தான் எலிமினேட் ஆக வேண்டும் என்றும் பிக் பாஸ் டீம் பிளான் வேற மாறி செய்தால் தான் அடுத்த இடத்தில் குறைவான ஓட்டுக்களுடன் இருக்கும் அபிநய் வெளியேறுவார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X