twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரியேட்டிவிட்டி இல்லாத பிக்பாஸ் ஹோம்மேட்ஸ்..டாஸ்க்கை நிறுத்துங்கள் நெட்டிசன்கள் கெஞ்சல்

    |

    பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆட்டம் பாட்டம் என டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
    டீம் இரண்டாகப் பிரிந்து டாஸ்க் செய்கிறோம் என கண்டன்ட், கிரியேட்டிவிட்டி இல்லாமல் பார்வையாளர்களை எதையோ செய்து நம்மை வறுத்தெடுத்தனர்.
    தயவு செய்து இந்த டாஸ்கை நிறுத்தி தொலைங்கடா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.

    பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு என்ன ஆச்சு.. கதரும் அமுதவாணன், ரச்சிதா.. ஷாக்கான ரசிகர்கள்! பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு என்ன ஆச்சு.. கதரும் அமுதவாணன், ரச்சிதா.. ஷாக்கான ரசிகர்கள்!

     இந்த வாரம் இழுவை வாரம்-கொதிக்கும் நெட்டிசன்கள்

    இந்த வாரம் இழுவை வாரம்-கொதிக்கும் நெட்டிசன்கள்

    பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்ததில் இருந்து வேக வேகமாக செல்கிறது. போட்டியாளர்களிடையே கோபம், சூழ்ச்சி, சண்டை, காதல், மோதல் என பல்வேறு உணர்ச்சி மோதல்கள் பார்வையாளர்களுக்கு பெரிய கண்டண்டுகளாக இருந்தது. இதனால் சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் செய்திகளில் சூடு பறந்தது. ஆனால் இந்த வார நிகழ்ச்சியில் டாஸ்க் கொடுக்கிறேன் என்று சாதாரண ஆடல் பாடல் டாஸ்கை கொடுத்து பிக்பாஸ் டீமையும் நம்மையும் சேர்த்து சாகடிக்கிறார். பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளர்களில் சிலரைத்தவிர யாருக்குமே கிரியேட்டிவிட்டி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

     கண்டெண்ட் நாலெட்ஜ் இல்லாத ஹவுஸ்மேட்ஸ்

    கண்டெண்ட் நாலெட்ஜ் இல்லாத ஹவுஸ்மேட்ஸ்

    கண்டென்ட் நாலெட்ஜ் கிரியேட்டிவிட்டி இல்லாமல் தங்களுக்கு தோன்றியதை குழந்தைத்தனமாக செய்து வருகின்றனர் போட்டியாளர்கள். கடந்த சீசனில் அந்த டீமில் உள்ளவர்கள் ராஜூ உள்ளிட்ட பலரும் கலக்கினர். ஆனால் அந்த சீசனில் அமுதவாணனை தவிர்த்து வேறு யாருக்குமே கிரியேட்டிவ் மைண்ட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்படுவது பிக் பாஸை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களே.

     அருமையான தீம் சொன்ன விக்ரமன், அமுது, ரச்சிதா அந்த டிவி டீம்

    அருமையான தீம் சொன்ன விக்ரமன், அமுது, ரச்சிதா அந்த டிவி டீம்

    அந்த டிவி, இந்த டிவி என இரண்டு டீம்களை பிரித்து போட்டி நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த சமையல் போட்டியில் அமுதவாணனின் அந்த டிவி டீம் வித்தியாசமான கான்செப்டுடன் கலக்கியது. ஆனால் எந்தவித கிரியேட்டிவிட்டி இல்லாமல் குழந்தை போல நடிக்கிறேன் என்று நம்மையும் சேர்த்து ஒரு வழி செய்து விட்டார்கள் மணிகண்டா, மைனாவின் இந்த டிவி டீமினர். இன்றும் 2 டீம்களுக்கு இடையே நடந்த போட்டியில் அமுதவாணனின் அந்த டிவி ஸ்கோர் செய்ததை காண முடிந்தது. சினிமா பாட்டுக்கு ஜனனியும், குயின்சியும் ஆடினர். அமுதவாணன் தனியாக பராசக்தி வசனத்தை முழுவதுமாக பேசி கலக்கினார். இது எல்லாவற்றிலும் உச்சகட்டமாக அமுதவாணன், விக்ரமன், ரட்சிதா நடித்த துப்புரவு தொழிலாளி கான்செப்ட் மிக அருமையாக இருந்தது.

     இந்த டிவியின் இழுபறி, கிரியேட்டிவிட்டி எங்கே

    இந்த டிவியின் இழுபறி, கிரியேட்டிவிட்டி எங்கே

    நல்ல கருத்தை சொன்னது துப்புரவு தொழிலாளியாக வந்து உயிரிழப்பவராக விக்ரம் நடித்து கலக்கினார். மலம் அள்ள எந்திரம் வேண்டும் மனிதக்கழிவை மனிதனே அள்ளக்கூடாது என்கிற கருத்து சிறப்பான ஒன்று. அதே நேரம் மைனா டீமில் எந்தவித கிரியேட்டிவிட்டியும் இல்லாமல் சாதாரணமாக நிகழ்ச்சியை நடத்தினர். மைனா- மணிகண்டன் இருவரும் பார்வையற்றவர்களாக ஒரு சிறு நாடகம் நடித்தனர், அதில் எந்த சப்ஜெக்டும் இல்லை. எந்த மெசேஜும் அதில் இல்லை. பார்வையற்ற இருவர் திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தை உண்டாகிறது விபத்தில் இருவரும் இறந்து விடுகின்றனர் என்பதில் என்ன மெசேஜ் இருக்கிறது என்று தெரியவில்லை.

     கவிஞர், மோனோ ஆக்டர் அசீம் சொந்தக்கதை சோகக்கதை

    கவிஞர், மோனோ ஆக்டர் அசீம் சொந்தக்கதை சோகக்கதை

    அடுத்து வந்தார் கவிஞர் அசீம். கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்கிற போர்வையில் தன் வாழ்க்கையில் நடந்ததை படித்தார். அவரோடு சேர்த்து நம்மையும் சோதித்தார். அதன் பின்பு மோனோ ஆக்டிங் செய்யப் போகிறேன் என்று கிளம்பினார் அசீம். சரி இதிலாவது ஏதாவது வித்தியாசம் காண்பிப்பார் என்று பார்த்தால், அட அதிலேயும் சொந்தக்கதை சோகக்கதையா? தன்னுடைய காதல்-திருமணம்-டைவர்ஸ் கதையை அன்று ஹோம் மேட்ஸ் கேட்கவில்லை என்பதற்காக இன்று சொல்லியும், நடித்தும் காண்பித்துவிட்டார். மோனோ ஆக்டிங் செய்கிறேன் என்று அழுதார். இதில் எந்த மெசேஜும் நமக்கு தெரியவில்லை. மொத்தத்தில் அனைவரும் சேர்ந்து நம்மை ஒருவழி பண்ணிவிட்டார்கள், சீக்கிரம் நிறுத்துங்க இந்த டாஸ்க்கை என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

    English summary
    Bigg Boss has given the task of "dance play task'' to keep things quiet this week in the Bigg Boss house.They told us to divide the task into two teams, and without creativity they made the audience do something and grilled us. Netizens are strongly posting on social media that please stop this task and do not go away.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X