அடக் கொடுமையே.. நடிகையின் பாலியல் புகாருக்கு காரணம் ‘பிக் பாஸ்’ ஆ.. இது புதுசால்ல இருக்கு!

காதலர் மீது நடிகை பாலியல் புகார் கூறியதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மும்பை: காதலர் அதிகம் பாலியல் தொல்லை கொடுத்ததால், திருமணத்தை நிறுத்தியதாக நடிகை புகார் கூறிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரபல இந்தி சேனல் ஒன்றில் காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா போன்ற முக்கிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த் சாஹர். இவருக்கும், சின்னத்திரை நடிகையுமான சுபுஹிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஆனால், திடீரென இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு முற்றி, கைகலப்பு வரை சென்றதால், திருமணத்தை நிறுத்தினர்.

நடிகை புகார்:

நடிகை புகார்:

சித்தார்த் தன்னை பாலியல் ரீதியாக அதிகம் சித்ரவதை செய்வதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார் சுபுஹி. இது தொடர்பாக போலீசிலும் அவர் புகார் அளித்தார். உடலில் காயங்கள் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக் பாஸ்:

பிக் பாஸ்:

இதனால், அவரது ரசிகர்களுக்கு சித்தார்த் மீது கோபம் ஏற்பட்டது. அவரை வில்லன் ரேஞ்சுக்கு அனைவரும் திட்டத் தொடங்கினர். ஆனால், உண்மையில் அவர்களுக்குள் பிரிவு, கைகலப்பு ஏற்பட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சுபுஹியின் விருப்பம்:

சுபுஹியின் விருப்பம்:

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் சமீபகாலமாக கணவன், மனைவி, காதலர்கள் என ஜோடியாக போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். சித்தார்த்துடன் தானும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளார் சுபுஹி. ஆனால், சித்தார்த் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

காயம்:

காயம்:

இது தொடர்பாகத்தான் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதல் அடியே சுபுஹி தான் கொடுத்துள்ளார். இதில் சித்தார்த்தும் காயமடைந்துள்ளார். ஆனால், இது வெளியில் தெரிந்தால் தனக்கு அசிங்கம் என அப்படியே கதையையே மாற்றி விட்டார் சுபுஹி.

இது புதுசால்ல இருக்கு:

இது புதுசால்ல இருக்கு:

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து தன் பக்க நியாயம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சித்தார்த். அவரது இந்த விளக்கத்தைக் கேட்டப் பிறகு தற்போது சுபுஹியை மக்கள் அனைவரும் திட்டி வருகின்றனர். வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுவார்கள் என்றால், இங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்தே காதலர்கள் சண்டையிட்டு பிரிந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X