கணவரை பிரிய காரணம் இதுதான்..மனம் திறந்த பிக்பாஸ் இசைவாணி !
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கானா பாடகி இசைவாணி திருமண முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்5 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர்தான் இசைவாணி. உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இவரைதேர்வு செய்து பெருமைப்படுத்தியது BBC.
பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

இசைவாணி
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் அறிமுகமே இல்லாதவர்கள் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக முதலில் உள்ளே வந்தவர் இசைவாணி தான். ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடினாலும், பின்னர் இவரது விளையாட்டு சூடு பிடிக்கத் தொடங்கியது.

அடிக்கடி சண்டை
மேலும், கடந்து வந்த பாதையில் ஒரு வேளை சாப்பாட்டுக்காவும், உடைக்காகவும் கஷ்டப்பட்டது குறித்து கண்கலங்கி கூறினார். இதனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், இமான் அண்ணாச்சியுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு சர்ச்சையில் சிக்கினார். இதனால், 50 நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

மனம் திறந்த இசைவாணி
இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு திருமணமான தகவலை சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனால், அவர் வெளியில் வந்த போது பலர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர் அப்போதும் பிரிவுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்களான நிலையில் திருமணம் முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கானா பாடகர் ஸ்ரீ காந்த் தேவா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் பல கனவுகளுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அது நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. ஸ்ரீ காந்த் தேவா கானா பாடகர் தான் இருந்தாலும் அவரால் நான் கானா பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுதான் காரணம்
எனக்கு கானா பாடல் தான் எல்லாமே, அதை மிகவும் நேசிக்கிறேன். பாடல் பாட கணவரின் குடும்பத்தில் அனுமதிக்காததால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். தற்போது அவருக்கு வேறு திருமணம் கூட நடந்துவிட்டது. தற்போது எனக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என இசைவாணி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











