பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறேனா?: பாரதிராஜா ஹீரோயின் விளக்கம்
Recommended Video

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து நடிகை ரியா சென் விளக்கம் அளித்துள்ளார்.
பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ரியா சென். தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் என்ற வெப்சீரீஸில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார்.

படுக்கையறை காட்சி
திருமணத்திற்கு பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்க கஷ்டமாக இருப்பதாக ரியா சென் தயாரிப்பாளர் ஏக்தா கபூரிடம் தெரிவித்தாக செய்திகள் வெளியாகின.

பிக் பாஸ்
சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனில் கலந்து கொள்ளுமாறு ரியா சென்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கலந்து கொள்வது நிச்சியம் என்று கூறப்பட்டது.

கர்ப்பம்
ரியா சென் கர்ப்பமாக இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது. தன்னை பற்றிய வதந்திகளுக்கு ரியா சென் இன்ஸ்டாகிராம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இல்லை
திருமணத்திற்கு பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நான் கார்ப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார் ரியா.

வைரல்
ரியா சென்னும், நிஷாந்தும் நடித்த படுக்கையறை காட்சி கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் வெப்சீரீஸின் ட்ரெய்லர் வெளியாகும் முன்பே காட்சி கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











