என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த கஷ்ட காலம்.. பிக் பாஸ் ஜனனி ஆடுறதை பார்த்து காண்டான ரசிகர்கள்!

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனிருத் இசையில் வெளியான காவாலா பாடலுக்கு தமன்னாவை போல டான்ஸ் போட பல இளம் நடிகைகளும் முயற்சித்து ரீல்ஸ் போட்டு அந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சில நடிகைகள் காவாலா பாட்டை போட்டு விட்டு ஸ்கூல் பசங்களை விட மோசமாக கை, கால்களை அசைத்து வருகின்றனர் என பங்கமாக கலாய்க்கப்பட்டும் வருகின்றனர்.

இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ரூத்தை லோ பட்ஜெட் தமன்னா என கிண்டலடித்த நெட்டிசன்கள், தற்போது என்னடா காவாலா பாட்டுக்கு வந்த கஷ்டகாலம் என ஜனனியின் டான்ஸை மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.

Bigg Boss Janany gets trolled for her latest Jailer Kaavaala reels

லாஸ்லியாவை போலவே: இலங்கையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஜனனின் சீசன் 6ல் என்ட்ரியானதுமே லாஸ்லியாவுடன் பலரும் கம்பேர் செய்ய ஆரம்பித்தனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனில் இருந்த போட்டியாளர்களில் முதல்கட்டமாக ஜனனிக்குத் தான் ரசிகர்கள் ஆர்மியை ஆரம்பித்தனர்.

அமுதவாணன் உடன் ஜனனி பேசத் தொடங்கியதும் கடைசி வரை அவரது ஷேடோவிலேயே இருந்து சரியாக விளையாடவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டார் ஜனனி.

லியோவில் வாய்ப்பு: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ஷிவானிக்கு எப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் அதிரடியாக வாய்ப்பு கிடைத்ததோ அதே போல 6வது சீசன் முடிந்ததும் ஜனனிக்கு லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

லியோவை தொடர்ந்து சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காவாலா பாட்டுக்கு டான்ஸ்: லியோ படத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் ஜனனி திடீரென ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு தற்போது ரீல்ஸ் போட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கருநீல நிற வெல்வட் உடையை அணிந்து கொண்டு செம க்யூட்டாக பொம்மை போல டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளா ர் பிக் பாஸ் ஜனனி.

Bigg Boss Janany gets trolled for her latest Jailer Kaavaala reels

காவாலாவுக்கு வந்த கஷ்ட காலம்: ஜனனியின் ஆட்டத்தை அவரது ரசிகர்கள் சூப்பராக இருக்கு என கமெண்ட் போட்டு கொண்டாடி வரும் நிலையில், நெட்டிசன்கள், என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த கஷ்ட காலம் என்றும், பள்ளி ஆண்டு விழாவில் ஸ்டெப்ஸ் தெரியாமல் பச்சைக் குழந்தைகள் டான்ஸ் ஆடுவது போன்ற ஒரு ஆட்டத்தை போட்டு காவாலா பாட்டையும் தமன்னா டான்ஸையுமே கலாய்க்கிறார் ஜனனி என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X