லாஸ்லியாவை முந்திய பிக் பாஸ் பிரபலம்.. தளபதி 67 படத்தில் நடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரு?
சென்னை: பிக் பாஸ் பிரபலங்கள் தொடர்ந்து சினிமா திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை அள்ளி வருகின்றனர். இந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்களில் பிக் பாஸ் பிரபலங்கள் போட்டி போட்டு இடம் பெற்று இருந்தனர்.
இந்நிலையில், விஜய்யின் தளபதி 67 படத்திலும் பிக் பாஸ் பிரபலம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை லாஸ்லியா தீவிர விஜய் ரசிகை என்பது தெரிந்த நிலையில், அவரையே இந்த சீசன் போட்டியாளர் ஒருவர் ஓவர்டேக் செய்து இருப்பது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் ரசிகை லாஸ்லியா
இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், கோலிவுட்டில் அடுத்தடுத்து சினிமாவில் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், அந்த வாய்ப்பை லாஸ்லியாவுக்கு முன்னதாக மற்றொரு இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் போட்டியாளர் தட்டிப் பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 67ல் ஜனனி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த ஜனனிக்குத் தான் தற்போது அப்படியொரு ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் ஜனனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

ஜாக்பாட்
பிக் பாஸ் சீசன் 6ல் இந்த சீசனில் ஆரம்பத்தில் ஜிபி முத்துவுக்கும் ஜனனிக்கும் தான் அதிகளவில் ஆர்மி அமைக்கப்பட்டு ரசிகர்கள் இருந்தனர். ஆனால், அதிரடியாக ஜனனி வெளியேற்றப்பட்ட நிலையில், பலரும் அது அன்ஃபேர் எவிக்ஷன் எனக் கூறினர். மேலும், அமுதவாணன் ஜனனியை பயன்படுத்திக் கொண்டு அவரை வெளியேற்றி விட்டு இவர் உள்ளே இருக்கிறார் என அசீம் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தில் அமீர், பாவனி
தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அஜித், விஜய் படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. விஜய்யின் வாரிசு படத்தில் சம்யுக்தா நடித்த நிலையில், அஜித்தின் துணிவு படத்தில் அமீர், பாவனி, சிபி என மூன்று பிக் பாஸ் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஒரே ஒரு சீன்
விக்ரம் படத்திலேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களை ஒரே ஒரு சீனில் நடிக்க வைத்து இருந்தார். துணிவு படத்திலும் பிக் பாஸ் பிரபலங்கள் வாம்மா மின்னல் ரேஞ்சில் வந்து சென்றனர். இந்நிலையில், தளபதி 67 படத்திலும் ஒரே ஒரு சீனுக்கு ஜனனி வரப் போகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள் அதிகம்
துணிவு பிளாஷ்பேக் போர்ஷனில் சில காட்சிகள் என்றாலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் நடித்த நிலையில், அதை பற்றிய பேச்சுக்கள் எழும் நிலையில், அவர்களுக்கான ஈர்ப்பு மற்றும் ஃபேன் பேஸ் ஆன்லைனில் அதிகம் இருப்பதால் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் இதுபோல பிக் பாஸ் பிரபலங்களை போட்டு எடுப்பதால் ஒரு ரீச் கிடைப்பதாக கூறுகின்றனர்.

ராஷ்மிகாவின் எக்ஸ்
பிக் பாஸ் ஜனனி மட்டுமின்றி ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலரான கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், ரக்ஷித் ஷெட்டி, ஜனனி என தளபதி 67 அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











