Bigg Boss Janany: ஆத்தி.. என்ன மாலையும் கழுத்துமா பிக் பாஸ் ஜனனி நிக்கிறாங்க.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனி செம ஹேப்பியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவை போலவே இவரும் இலங்கையில் இருந்து சென்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வந்தவர் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் உடன் அன்பாக பழகி வந்த ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Janany opens about her next project with a Pooja ceremony still

க்யூட்டான பொண்ணு ஜனனி: பிக் பாஸ் சீசன் 6ல் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், ரசிகர்களை பார்த்த மாத்திரத்திலேயே அதிகம் கவர்ந்து ஆர்மியை எல்லாம் ஆரம்பிக்க வைத்தது ஜனனி தான்.

ஜிபி முத்துவுக்கும் ஜனனிக்கும் தான் 6வது சீசனில் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் அசீம், விக்ரமனுக்கு எல்லாம் ரசிகர்கள் அதிகரித்தனர். வெறித்தனமாக பிக் பாஸ் வீட்டில் விளையாடவில்லை என்றாலும், க்யூட்டாக விளையாடி வெளியேறிய ஜனனிக்கு இன்னமும் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Bigg Boss Janany opens about her next project with a Pooja ceremony still

லியோ படத்தில் ஜனனி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் உள்ளிட்ட வெகு சில போட்டியாளர்களுடன் மட்டுமே ஜனனி அதிகம் பேசி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜனனி வெளியேறிய நிலையில், உடனடியாக விஜய்யின் லியோ படத்தில் அவருக்கு ஒரு சின்ன ரோல் கிடைத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விக்ரம் படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானி நாராயணனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் ஜனனிக்கு என்ன மாதிரியான ரோல் கொடுத்திருக்கிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

மாலையும் கழுத்துமாக ஜனனி: இந்நிலையில், புதிய படத்துக்கு பூஜை போட்டது போல இளைஞர் ஒருவர் அருகே மாலையும் கழுத்துமாக ஜனனி நிற்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் மாலை அணிந்து நிற்கும் நிலையில், புதிய படமா? என ரசிகர்கள் நினைத்து ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புதிய ஆல்பம் பாடல் ஷூட்டிங் செய்யப் போறேன் என ஜனனி அந்த போட்டோவுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நீங்களும் ஒரு நல்ல நடிகையாக வலம் வர எங்களுடைய வாழ்த்துக்கள் செல்லமே என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜனனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X