பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்கை மிஸ் பண்ணிட்டேனா.. இப்போ பாருங்க.. யூனிஃபார்மில் சில்லாக்கிய ஜனனி!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஜனனி பள்ளிக்கூட சிறுமியை போல யூனிஃபார்ம் அணிந்து கொண்டு அசத்தலாக போஸ் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.
லாஸ்லியாவை போலவே இலங்கையில் இருந்து வந்த பிக் பாஸ் போட்டியாளரான ஜனனிக்கு இமிடியேட்டாக ரசிகர்கள் ஆர்மியை எல்லாம் அமைத்து அமர்க்களப்படுத்தினர்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரியளவில் ஸ்கோர் செய்யாமல் இருந்தாலும், தனது க்யூட்டான லுக் மற்றும் இயல்பான பேச்சால் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட ஜனனி பிக் பாஸ் முடிந்ததும் பெரிய படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
லியோ படத்தில் ஜனனி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் ஜனனியும் ஒரு குட்டி ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக வந்த தகவலே அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
யூனிஃபார்மில் ஜனனி: பிக் பாஸ் பிரபலமான ஜனனி கான்வென்ட் ஸ்கூல் மாணவி போல செம க்யூட்டாக யூனிஃபார்ம் அணிந்து கொண்டு அழகாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்: பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்கை கூட மிஸ் பண்ணிட்டேன் என ஃபீல் பண்ணாதீங்க, இதோ உங்களுக்காக யூனிஃபார்மில் எப்படியிருக்கேன்னு பார்த்து சொல்லுங்க என கேப்ஷன் கொடுத்து ரகளை செய்துள்ளார் பிக் பாஸ் ஜனனி.

பிக் பாஸ் ஜனனியை ஸ்கூல் டிரெஸ்ஸில் பார்த்து விட்டு கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கப் போறீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புதுப்படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டதா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் நிரம்பி வழிகின்றன.
ஓவர் மேக்கப்: ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் ஓகே வீட்டில் குழந்தைக்கு அம்மா அதிக பவுடர் மூஞ்சி ஃபுல்லா அப்பி விடுவது போல மேக்கப்பையும் அதிகமாக போட்டுருக்கீங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











