ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு.. வனிதாவை கலாய்த்த தாத்தா.. நோஸ் கட் பண்ணிய ராஜமாதா.. செம ப்ரோமோ!
சென்னை: மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ஆஜீத் மற்றும் கேப்ரியல்லாவின் அதிரடி நடனத்தை நடுவர்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் வியந்து பாராட்டினர்.
அதே சமயம் அடுத்ததாக ஆடிய வனிதா விஜயகுமார் சுரேஷ் தாத்தாவின் ஆட்டத்திற்கு நோஸ் கட் கிடைத்தது.

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு வெளியே வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை நாங்களே அவர்களுக்கு இன்னொரு மேடையை அமைத்து தருகிறோம் என்கிற உயரிய நோக்கத்துடன் விஜய் நடத்தி வரும் நடன நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஜோடிகள் என பிக் பாஸ் ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.

ஜோடிகளுக்கு கொரோனா
பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோடி போட்டு நடனமாடிய பல ஜோடிகளுக்கு ஜோடி ஜோடியாக கொரோனா வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் பிக் பாஸ் ஜோடிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆட்டம் ஆரம்பம்
விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளான ஆஜீத் மற்றும் கேபி ஏற்கனவே நடனமாடுவதில் கில்லாடிகள். தற்போது வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோவிலும் அவர்களின் ஆட்டம் அட்டகாசமாக உள்ளது. ஆஜீத் பாடுவதையே மறந்து டான்ஸர் ஆகிவிடும் அளவுக்கு கேபியுடன் ஆடி வருகிறார்.

ஆஜீத் கேபி அமர்க்களம்
விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளான ஆஜீத் மற்றும் கேபி ஏற்கனவே நடனமாடுவதில் கில்லாடிகள். தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரமோவிலும் அவர்களின் ஆட்டம் அட்டகாசமாக உள்ளது. ஆஜீத் பாடுவதையே மறந்து டான்ஸர் ஆகிவிடும் அளவுக்கு கேபியுடன் ஆடி வருகிறார்.

நகுல் பாராட்டு
நடுவர்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் இணைந்து ஆஜீத் மற்றும் கேபியின் அசத்தல் ஆட்டத்தை பாராட்டி தள்ளுகின்றனர் இந்த புதிய ப்ரோமோவில், அரங்கத்தை அதிர வைத்த இவர்களின் நடனத்தை தொடர்ந்து உண்மையிலேயே அரங்கம் அதிர்ந்த பெர்ஃபார்மன்ஸும் இடம்பெற்றுள்ளது.

வாயாட்டத்தை நிப்பாட்டு
நாங்களும் ஆடுகிறோம் பாருங்கள் என காமெடி பண்ணும் அளவுக்கே இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி போட்டு ஆடி வருகின்றனர் வனிதா விஜயகுமாரும் சுரேஷ் தாத்தாவும், வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவில் ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு என சுரேஷ் தாத்தா வனிதாவை கலாய்த்துள்ளார்.

ராஜாமாதா நோஸ் கட்
வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் தாத்தாவின் ஆட்டத்தை பார்த்து விட்டு சூப்பர் என ஒரு பேச்சுக்கு சொல்லும் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன்.. ஆனால், உங்களிடம் நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் என நல்லாவே நோஸ் கட் பண்ணும் ப்ரோமோவை போட்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு ஹைப்பை கூட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











