ரம்யா கிருஷ்ணன் முன்னாடியே நீலாம்பரியாக மாறிய பிக் பாஸ் அபிஷேக்.. கண் வைக்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் எல்லாம் பெண்களாகவும், பெண் போட்டியாளர்கள் எல்லாம் ஆண்களாகவும் மாறியுள்ளனர்.

அதில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருப்பது யாரென்றால் நம்ம சினிமா பையன் பிக் பாஸ் அபிஷேக் ராஜா தான்.

அப்படியே அச்சு அசல் பெண்ணாக மாறி பரத நாட்டியம் ஆடியிருப்பதை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் மிரண்டு போய் விட்டனர்.

யூடியூப் விமர்சகர்

யூடியூப் விமர்சகர்

Fully Filmy யூடியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அபிஷேக் ராஜா, தனியாக ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து விமர்சனம் செய்து வந்தார். கமல்ஹாசன் - ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன் - விஜய்சேதுபதி என லாக்டவுனில் அவர்களை வைத்து பேட்டிகளை உருவாக்கி கவனத்தை ஈர்த்தார்.

பிக் பாஸ் வாய்ப்பு

பிக் பாஸ் வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலிடம் பேட்டிக் கண்ட நிலையில், அப்படியே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் முயற்சி செய்ய அவருக்கு பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், உள்ளே வந்த அபிஷேக் ராஜாவின் ஓவர் பர்ஃபார்மன்ஸ் தாங்க முடியாத ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போடாமல் விரட்டி அடித்தனர். மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு வைல்டு கார்டு வாய்ப்பை கொடுத்த நிலையிலும், நீ கெளம்பு ராசா என இமிடியேட்டாக வெளியே அனுப்பியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2

ஆனாலும், விஜய் டிவியை விட்டுப் போக மாட்டேன், என்னுடைய திறமையை ரசிகர்களுக்கு புரிய வைப்பேன் என தொடர்ந்து போராடி வருகிறார் அபிஷேக் ராஜா. பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டு நடனம் ஆடி வரும் அபிஷேக் ராஜா, இந்த வாரம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

நீலாம்பரியாக

நீலாம்பரியாக

இந்த வாரம் உல்டா ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் ஆண் போட்டியாளர்கள் எல்லாம் பெண்ணாகவும், பெண் போட்டியாளர்கள் ஆணாகவும் மாறி உள்ளனர். அதில், படையப்பாவின் மின்சார பூவே பாடலுக்கு நடனமாட அப்படியே அச்சு அசல் பெண்ணாகவே மாறி உள்ளார் அபிஷேக் ராஜா. அதிலும், ரம்யா கிருஷ்ணன் முன்பாக நீலம்பரியாக நடனமாடுவதற்கு தனி தைரியம் வேண்டும் தான்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

அபிஷேக் ராஜாவை ஜூலி, காயத்ரி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பிக் பாஸ் உலகின் மிரட்டல் போட்டியாளராக ஒப்பிட்டு ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது அபிஷேக் ராஜாவின் பரத நாட்டிய டான்ஸை பார்த்து அசந்துப் போன ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X