ராஜமெளலியுடன் செல்ஃபி எடுத்த தாமரைச்செல்வி.. பிக் பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் ஃபினாலே கொண்டாட்டம்!
சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் கிராண்ட் ஃபினாலே சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன் ஒளிபரப்பு வரும் செப்டம்பர் 4ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
தெலுங்கு பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் பிரம்மாஸ்திரம் படத்தை புரமோட் செய்ததை போலவே தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் பிரம்மாஸ்திரம் படத்தை புரமோட் செய்துள்ளனர்.
இயக்குநர் ராஜமெளலி, ரன்பீர் கபூர், நாகார்ஜுனா உள்ளிட்டோருடன் தாமரைச் செல்வி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே
இயக்குநர் ராஜமெளலி, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நாகார்ஜுனா பங்கேற்ற பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கூட இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடக்கவில்லையே என ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு கோலாகலமாக நடைபெற்ற அந்த ஷோ வரும் செப்டம்பர் 4ம் தேதி ஒளிபரப்பாகிறது.

ராஜமெளலி படமாகவே
பிரம்மஸ்திரம் படத்தை அந்த படத்தின் இயக்குநரை வைத்து புரமொட் செய்வதற்கு பதிலாக இயக்குநர் ராஜமெளலியை வைத்தே ரன்பீர் கபூர் மாஸ்டர் பிளான் போட்டு புரமோட் செய்து வருகிறார். அயன் முகர்ஜி இயக்குநரா? ராஜமெளலி இயக்குநரா என்கிற கன்ஃப்யூஷனிலேயே ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டால் போதும் என நினைக்கின்றனர் போல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ராஜமெளலியுடன் செல்ஃபி
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் தனது கணவருடன் நடனமாடிய தாமரைச் செல்வி இயக்குநர் ராஜமெளலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நாடக கலைஞராக இருந்த தாமரைச் செல்வி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார். தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் என பிக் பாஸ் குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டார்.

ரன்பீர் கபூருடன் புகைப்படம்
பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரம் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அவருடனும் தாமரைச் செல்வி புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆலியா பட் சென்னையில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இயக்குநர் ராஜமெளலி மற்றும் ரன்பீர் கபூருடன் ஒட்டுமொத்த பிக் பாஸ் பிரபலங்கள் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

தெலுங்கு பிக் பாஸ்
தெலுங்கு பிக் பாஸை நடத்தி வரும் நடிகர் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டார். நாகார்ஜுனா தான் என் கிரஷ் என ரம்யா கிருஷ்ணன் பேசிய புரமோ வீடியோ விஜய் டிவியில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. முழு எபிசோடையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











