பிக் பாஸ்ல சம்பாதித்த பணம்.. சொந்த காசுல எடுத்த படம்.. அம்மா முன் உடைந்து அழுத ஜோவிகா!
சென்னை: பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. அந்த போஸ்டரில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வனிதாவிற்கு ராபர்ட் மாஸ்டர் வயிற்றில் முத்தம் கொடுக்கும்படி இருந்தது. இந்த போஸ்டர் டிரெண்டான நிலையில், நேற்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், ஜோவிகா கண்கலங்கி பேசி இருந்தார்.
இந்த நேரத்தில் நான் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் அவர்கள் இல்லை என்றால் இந்த படத்தை நான் எடுத்திருக்கவே முடியாது. என்னுடைய சொந்த உழைப்பில், நான் சம்பாதித்த பணத்தில் எடுத்த படம் இது, இந்த வயதில், என்னை ஒரு படத்தின் தயாரிப்பாளராக்கியது விஜய் டிவி தான். நான் வெளிநாடு போனாலும், பலரும் என்னை உரிமையோடு அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால், நான் பிக் பாஸ் வீட்டில் அத்தனை நாள் இருந்து இருக்கவே முடியாது அவர்களின் அன்புக்கு நன்றி. இந்த படம் இவ்வளவு தூரம் வந்ததற்கு முக்கிய காரணமே ஸ்ரீகாந்த் அவர்கள் தான், சுட சுட பிஜிஎம் அணுகுவார். அதில், சில மாற்றங்கள் செய்யலாமா என்று கேட்டதுமே அடுத்த மியூசிக்கை போட்டு அனுப்புவார் அவருக்கு மிகப்பெரிய நன்றி.

அனைவருக்கும் நன்றி: என்ன நடந்தாலும் நாங்கள் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது. அங்கு அவ்வளவாக ட்ரான்ஸ்போர்ட் வசதி இல்லை. படப்பிடிப்பது தளத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் செல்ல வேண்டும் அப்படி இருந்தும் பலரும் நடந்து படப்பிடிப்பிற்கு கலந்து கொண்டார்கள். அதை நினைக்கும் போது உண்மையிலேயே எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த நேரத்தில் எந்த நடிகர்களும் அப்படி இருக்க மாட்டார்கள். கேரவன். ஏசி என அனைத்தையும் கேட்பார்கள். ஆனால் அடிப்படை தேவை இல்லாமல் கூட இவர்கள் எங்களுக்காக படத்தில் நடித்தார்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல டெக்னிசீயன்ஸ்கள் அவர்களின் சொந்த படம் போல நினைத்து கடுமையாக உழைத்தார்கள்' அதனால் தான் இந்த படம் இன்று முடிந்து இருக்கிறது. இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆதரவை பார்க்கும் போது தான், நாங்கள் தனியாக இல்லை, நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். என்னை இந்த இடத்திற்கு ஏற்றிவிட்ட விஜய் டிவிக்கு நன்றி என்றார்.
ஹீரோயினாகும் ஜோவிகா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோவிகா, வெளியில் வந்ததும், பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து, அம்மா வனிதா விஜயகுமார் எஎழுதி இயக்கி மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து, தெலுங்கில் ஒக்கடு, வர்ஷம், தேவி போன்ற பெரிய படத்தை தயாரித்த சுமத்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இரண்டு படத்தில் கமிட்டாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வனிதா விஜயகுமார் கூறினார்.


Click it and Unblock the Notifications











