ஹீரோயின் எல்லாம் ஓரம் போங்க... வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டிய ஜோவிகா!
சென்னை: மகள் ஜோவிகாவை எப்படியாவது சினிமாவில் நுழைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன், அதிரடியான கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். அம்மாவின் ஆசையை தீர்த்து வைக்க ஜோவிகாவும், குட்டை உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பழம் பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்திருந்தார். முதல் படத்தில் அழகாக க்யூட்டாக வலம் வந்த வனிதா, அந்த படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் நடித்த படம் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், நடிகர் ஆகாசை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

நடிகை வனிதா விஜயகுமார்: இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக்கொள்ள மகன் தந்தையுடன் வசித்து வருகிறார். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை.
திருப்புமுனையான நிகழ்ச்சி: திருமண வாழ்க்கை சரியாக அமையாததால்,சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்த வனிதா, அப்பா, அம்மா, அக்கா, தங்கை என அனைத்து சொந்தபந்தத்தையும் விட்டு விட்டு,மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதாவிற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கணிசமான படங்களில் நடித்து வருகிறார் வனிதா. அம்மாவைப்போல இவரது மகள் ஜோவிகாவும் சினிமாவில் கதாநாயகியாக ஆசைப்படுகிறார். அதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அம்மாவை போல, பல விஷயத்தை பேசுகிறேன் என்று, படிப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.
எல்லாரும் ஓரம் போங்கப்பா: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, இணையத்தில் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சி தூக்கலாக இருக்கும் இவரின் போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் சிலர் வயதுக்கு மீறிய கவர்ச்சி என்றும், என்ன ஜோவிகா இப்படி மாறிட்டாரே? என்று வாய்பிளந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் எந்தமாதிரியான நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜோவிகா தனது அம்மா வனிதா போல, இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











