கொல மாஸா இருக்கே.. பிக்பாஸ் ஜூலியின் அசத்தல் போட்டோஸ்.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஜூலியின் அசத்தல் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கொல மாஸாக உள்ளது என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

எழில் துரை இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதன் மூலம் விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவு நெகட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்ற நடிகையானார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொய்களை சொன்னதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜூலிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்தடுத்து, அம்மன் தாய், டாக்டர் எஸ் அனிதா, உத்தமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வருகிறார் ஜூலி.

நம்ம ஜூலியா இது?

நம்ம ஜூலியா இது?

கடற்கரையில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கள் செம வைரலானது. அதனை தொடர்ந்து மடிசாரிலும், வித்தியாசமான உடைகளிலும், விதவிதமான ஹேர் ஸ்டைலிலும் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி கலக்கினார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நம்ம ஜூலியா என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவரது போட்டோக்கள்.

தாவணி இல்லாமல்

தாவணி இல்லாமல்

இந்நிலையில் நடிகை ஜூலி தற்போது மேலும் பல போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பச்சை நிற பாவாடை, இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட் என மேலே தாவணி அணியாமல் மேட்சிங் நகைகளுடன், ஃபிரி ஹேரில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி.

 பொம்மை போன்று..

பொம்மை போன்று..

அதே உடையில் மேலே தாவணி போட்டப்படி, கழுத்து, கை, தலை, இடுப்பு என கூடுதல் ஆபரணங்களுடன் தலையில் பின்னல் போட்டு அசத்தல் லுக்கிலும் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பொம்மை போன்று இருக்கிறீர்கள் ஜூலி என புகழ்ந்துள்ளனர்.

கால் மேல் கால் போட்டு

கால் மேல் கால் போட்டு

அடுத்து கறுப்பு நிற உடையில் கையில் கூலிங் கிளாஸுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. சோஃபாவில் கால் மேல் கால் போட்டப்படி ஜூலி போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோவும் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது.

கொல மாஸ்...

கொல மாஸ்...

இந்த போட்டோவுக்கு ஜூலி, நீங்கள் நீங்களாக இருக்கும் தருணத்தில் தான் உங்களின் அழகு ஆரம்பமாகிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஜூலியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாரே வா.. கொல மாஸ்.. அமேஸிங்.. பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் ஜூலியின் அழகை தங்களின் கவிதை மூலமும் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: juliana ஜூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X