பிக்பாஸ் ஜூலியின் வருங்கால கணவரின் பெயர் இதுவா?.. அதான் அப்படி செய்தாரா?.. சஸ்பென்ஸ் ஓவர் ப்பா
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று அடையாளப்பட்ட ஜூலி; பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர்; இப்போது எதிலும் நடிக்காமல் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டாலும் வருங்கால கணவரின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் இருந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர் ஜூலி. அடிப்படையில் செவிலி தொழில் செய்துவந்த ஜூலி; அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சசிகலாவையும், அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் தனது கோஷங்களால் கிழித்து எடுத்துவிட்டார். அந்த சமயத்தில் ஜூலி கோஷம் போட்ட வீடியோதான் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருந்தது.
பிக்பாஸ் ஜூலி: போராட்டத்தில் கிடைத்த பிரபல்யம் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பொது விஷயத்துக்காக இப்படி குரல் கொடுத்தவர்; அந்த வீட்டுக்குள் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. ஆவல் மட்டுமின்றி ஜூலிக்கு ஆதரவாகவும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகட்டிவ்வான ஜூலியின் இமேஜ்: நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்கள் கமுக்கமாக விளையாடிய அவர்; போகப்போக பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதிலும் ஓவியாவுடனான சண்டையில் அவர் செய்த சில விஷயங்கள் குறும்படம் போட்டு நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து ஜூலி மீது இருந்த பாசிட்டிவ் இமேஜ் எல்லாமே நெகட்டிவ் இமேஜாக மாறியது. அது அவருக்கு பெரிய அதிர்ச்சியையும் கொடுத்தது.
சில படங்களில்: பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார். அந்த வீட்டிலிருந்து நெகட்டிவ் இமேஜோடு வெளியே வந்தவருக்கு; கோலிவுட் கதவுகள் திறந்தன. அதன்படி சில படங்களில் நடித்தார். அதுவும் ஒரு படத்தில் அவர் போட்டிருந்த அம்மன் வேடத்தை வைத்து கலாய்த்து தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போக இப்போது ஒட்டுமொத்தமாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
நிச்சயதார்த்தம்: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் அவருக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, 'என் முழு உலகையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதன் மீது அதிக பற்று இருக்க முடியாது. நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான், இப்போது அவன் எப்போதும் என்னுடையவன். உள்ளே பூட்டப்பட்டது. மோதிரம் பாதுகாக்கப்பட்டது. மனம் நிறைந்தது. அவரை பார்க்கும்வரை காத்திருங்கள்' என்று குறிப்பிட்டு வருங்கால கணவரின் பெயரையும், முகத்தையும் வெளிப்படுத்தாமல் போஸ்ட் போட்டிருந்தார்.
புது ஃபோட்டோ: இந்நிலையில் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு கேக் இருக்கிறது. அந்த கேக்கில் MJ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு பின்னணியில் மங்கலாக ஜூலியும், அவரது வருங்கால கணவரும் தெரிகிறார்கள். இதிலும் அவர் தனது வருங்கால கணவரின் முகத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் கேக்கில் எழுதப்பட்டிருக்கும் MJ என்பதில் J என்பது ஜூலியின் முதல் எழுத்தும், M என்பது அவரது வருங்கால கணவருடைய பெயரின் முதல் எழுத்தாக இருக்கலாம்; அநேகமாக முகம்மது அல்லது மாலிக் என்பது அவருடைய பெயராக இருக்கலாம்; அதனால்தான் நிச்சயதார்த்த புகைப்படத்தோடு மாநாடு படத்தில் இடம்பெற்ற மெஹரசைலா பாடலை ஒலிக்கவிட்டிருந்தார். அந்தப் படத்திலும் சிம்புவின் கதாபாத்திர பெயர் மாலிக்தான். எனவே ஜூலியின் காதலர் பெயர் மாலிக்காக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் டீகோட் செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











