எனக்கு இவர் மூன்றாவது கணவரா?.. என் கரு கலைய விஜய்தான் காரணம்..கதறி அழும் பிக்பாஸ் ஜூலி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழடைந்த ஜூலி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணமும் நடந்து முடிந்தது. இதற்கிடையே தேர்தல் சமயத்தில் தீவிர திமுக அதரவாளராக சமூக வலைதளங்களில் களமாடிய அவர்; தவெகவுக்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். இது ஒருபக்கம் இருக்க கிட்னி திருட்டு விஷயத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு தனது முழக்கங்களால் கவனம் ஈர்த்தவர் ஜூலி. அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டாலும் அவர் அந்த வீட்டுக்குள் நடந்து கொண்ட விதம் பலரிடம் விமர்சனத்தை பெற்றது. அதன் மூலமும் அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர்; சின்னத்திரையிலும் தலை காண்பித்தார்.

Bigg Boss Julie Files Police Complaint Against Social Media Rumours Breaks Down Before Media
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட ஜூலி: அதேபோல் முகம்து இக்ரீம் என்பவரை காதலித்தும் வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்தைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூழல் இப்படி இருக்க தேர்தல் சமயத்தில் தன்னை திமுக ஆதரவாளராகவே அடையாளப்படுத்திக்கொண்டார்.

Also Read
கொள்கையை மாற்றிய அஜித்?.. விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?.. ஆத்தாடி
கொள்கையை மாற்றிய அஜித்?.. விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?.. ஆத்தாடி

விஜய்க்கு எதிராக: அதுவும் விஜய் எந்த கூட்டத்தில் பேசினாலும் அடுத்த சில மணி நேரங்களில் சுடச்சுட விமர்சனம் செய்தோ அல்லது கிண்டல் செய்தோ வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். அதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்தார்கள். அந்த சமயத்தில் கிட்னி திருட்டு தொடர்பான விவகாரமும் பூதாகரமானது. அதில் ஜூலிக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வந்தது. அதனை வைத்தும் ஜூலியை தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் அட்டாக் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஜூலி கொடுத்த புகார்: இப்போது தவெகவும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்நிலையில் ஜூலி இன்று தனது கணவருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், 'தன்னை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். கிட்னி தருவதாக சொல்லி 15 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு ஜூலி ஏமாற்றிவிட்டார் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

ஜூலி செய்தியாளர் சந்திப்பு: புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கணவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசிய ஜூலி, "கிட்னி பிரச்னை ஒரு அவதூறு. அதை நான் ஹேண்டில் செய்துகொள்கிறேன். நான் மொத்தமாக உடைந்தது எங்கே தெரியுமா?.. இவர் எனக்கு மூன்றாவது கணவராம். நாங்கள் ஆறு வருடங்கள் காதலித்தோம். வீட்டு சம்மதத்துக்காக காத்திருந்தோம். இந்தத் திருமணத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். திமுகவிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு திருமணம் செய்ததாக சொல்கிறார்கள். அது பிரச்னை இல்லை. என்னுடைய முதல் இரண்டு கணவர்களையும் காட்ட சொல்லுங்கள். நாங்கள் இதை சமாளித்துவிடுவோம். ஆனல் எங்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை பற்றி யோசித்தீர்களா? அவர்களை நாங்கள் எப்படி சமாளிப்போம்" என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் விஜய்யின் ஆதரவாளர்கள் என் மேல் சுமத்திய வீண் பழியால் காவல் நிலையத்துக்கு அலைந்துகொண்டிருந்தேன். அப்போது எனது முதல் கரு கலைந்துவிட்டது. 41 பேர் உயிரிழந்தற்கு தான் காரணமில்லை என்று விஜய் சொல்லலாம். ஆனால் என் குழந்தையின் உயிர் பொனதற்கு விஜய்தான் காரணம்" என்றார் அழுதபடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X