பழசை மறக்காத ஜூலி.. சக்திக்கு பத்திரிகை கொடுத்து வாழ்த்து.. கல்யாணம் எப்போ தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் ஜூலிக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமண பத்திரிக்கையை கொடுக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். தற்போது ஜூலி பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த நடிகர் சக்திக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஓவியாவுடன் சண்டை போட்டு பெயரை கெடுத்துக்கொண்டார். அப்போது கமல், குறும்படத்தை போட்டுக்காட்ட ஜூலியின் மொத்த மரியாதையும் போய் ஜூலி வெளியில் தலை காட்டவே முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, உண்மையில் நான் அப்படிப்பட்டவள் இல்லை, நான் யார் என்பதை நிரூபிப்பதற்காக தான் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என கூறியிருந்தார்.

Bigg Boss Julie marriage
Photo Credit:

நிச்சயதார்த்தம்: அதன் பின், ஒரு சில சீரியல்கள், படங்களில் நடித்து வந்த ஜூலி, கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து இருந்தார். தனது வருங்கால கணவர் யார் என்று காட்டாமல், என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் மனிதனை நான் கண்டுபிடித்து விட்டேன். நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான் என பதிவிட்டு இருந்தார். ஜூலியின் வருங்கால கணவர் முகமது இக்ரீம், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர் பிஸ்னஸ் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

திருமண அழைப்பிதழ்: இந்நிலையில், ஜூலி தனது வாழ்க்கையை மாற்றிய பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரான சக்திக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை நடிகர் சக்தி வாசு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு என் அன்பான ஜூலிக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். நாம் எப்போதும் பிக் பாஸ் 1-இன் தூண்கள்.. இதை யாராலும் என்றென்றைக்கும் மறுக்க முடியாது.. உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலமும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் அமைய வாழ்த்துக்கள்.. உண்மையான இதயங்கள் ஒருபோதும் வருத்தப்படாது என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் பழசை மறக்காத ஜூலி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் ஜூலி புது வருடத்தில் புது வாழ்க்கையில் இணைய உள்ளார்,.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X