அடடா.. மனதை நெகிழவைத்த பிக் பாஸ் ஜூலி.. இந்த மனசுக்கே நல்லா இருப்ப.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் ஜூலிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமண அழைப்பிதழை ஒவ்வொரு பிரபலங்களையும் தேடி தேடி சென்று கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரேமலதா விஜய்காந்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டு அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஜூலி. போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டக்காரராக உள்ளே நுழைந்த ஜூலிக்கு, முதல் வாரத்தில் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஓவியாவுடன் சண்டை போட்டு பெயரை கெடுத்துக்கொண்டார். அப்போது கமல், குறும்படத்தை போட்டு காட்டி இதுதான் நடந்தது என்று அனைவரிடம் சொன்னதால், ஜூலியின் மொத்த மரியாதையும் போய் ஜூலி வெளியில் தலை காட்டவே முடியாமல் தவித்தார்.

பிக் பாஸ் ஜூலி: பின் மீண்டும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, உண்மையில் நான் மோசமானவள் இல்லை , நான் யார் என்பதை நிரூபிப்பதற்காக தான் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என கூறியிருந்தார். அதன் பின், ஒரு சில சீரியல்கள், படங்களில் நடித்துவந்த ஜூலிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். தனது வருங்கால கணவர் யார் என்று காட்டாமல், என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் மனிதனை நான் கண்டுபிடித்து விட்டேன் என பதிவிட்டு இருந்தார். ஜூலியின் வருங்கால கணவர் முகமது இக்ரீம், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர் பிஸ்னஸ் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

திருமண அழைப்பிதழ்: இந்நிலையில், திருமண வேலையில் மும்முரமாக இருக்கும் ஜூலி, முன்னதாக
பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரான சக்திக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்றார். தற்போது ஜூலி தனது வருங்கால கணவருடன் சேர்ந்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். அந்த போட்டோவை ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அவரிடம் இருந்து வந்த ஒரே ஒரு புன்னகை, பழைய நினைவுகள் அனைத்தையும் மீண்டும் கொண்டு வந்தது. கேப்டனின் ஆசீர்வாதங்கள் மீண்டும் கிடைத்ததைப் போல் உணர்ந்தேன். எனது இந்தச் சிறப்புமிக்க நாளில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினை பார்த்த இணையவாசிகள், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய உண்மையில் பாராட்டுக்குரியது, இந்த மனசுக்காகவே நீ நல்லா இருப்பம்மா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











