எந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு!
சென்னை: பிக் பாஸ் ஜூலி எமோஷனலாக பேசிய பிக் பாஸ் ஜோடிகள் புரமோ வீடியோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
Recommended Video
செவிலியரான ஜூலி மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார் ஜூலி.

ஜல்லிக்கட்டு ஜூலி
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் இளைஞர்கள் லட்சக் கணக்கில் திரண்டு நடத்திய மாபெரும் போராட்டத்தில் செவிலியரான ஜூலி கலந்து கொண்டு பஞ்ச் வசனங்களால் குரல் கொடுத்து பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸில் வாய்ப்பு
சினிமா மற்றும் மீடியாவை சேராத நபராக முதல் பிக் பாஸ் சீசனிலேயே ஜூலி பங்கேற்று கலக்கினார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஜூலி செய்வதையும் பேசுவதையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஜூலியின் இமேஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக டோட்டலாக டேமேஜ் ஆனதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

பட வாய்ப்புகள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவே ஜூலி மாறிவிட்டார். அம்மன் தாயி, அனிதா என சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கூடவே சர்ச்சைகளும் கிளம்பின. பெரிய அளவில் ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கிளாமர் போட்டோஷூட்
பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமாக போட்டோஷூட்களை நடத்தி தனக்கான ரசிகர்கள் வட்டத்தை பெருக்கி வருகிறார் நடிகை ஜூலி. மேலாடை அணியாமல், கருப்பு பெயின்ட் ஊற்றியபடி பிளாக் லிவ்ஸ் மேட்டருக்காக இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.
தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதும், எந்த தடைகளையும் உடைத்திடலாம்! 🙂#BB ஜோடிகள் - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/J0VfKQ2nYX
— Vijay Television (vijaytelevision) May 7, 2021
மீண்டும் பிக் பாஸ்
பிக் பாஸ் பிரபலங்களுக்கு மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விதமாக பிக் பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியை விஜய் டிவி உருவாக்கி உள்ளது. ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருக்கும் அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஜூலியும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.

பேப்பர் பொறுக்கினேன்
தற்போது வெளியாகி உள்ள பிக் பாஸ் ஜோடிகள் புரமோவில் நடிகர் சென்ட்ராயன் சென்னையில் பசியால் வாடி வந்த நிலையில், பேப்பர் பொறுக்கி சம்பாதிக்கும் ஒருவரை பார்த்து தானும் பேப்பர் பொறுக்கி சம்பாதித்தேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

காரித்துப்பிட்டாங்க
அதே புரமோவில் சென்ட்ராயன் உடன் இணைந்து ஆடிய நடிகை ஜூலி எந்த மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடினேனோ அதே மெரினாவில் தன்னை காரித்துப்பிட்டாங்க, ஜெயிக்கிற வரைக்கும் விடாமல் போராட வேண்டும் என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











