காலையிலேயே டைவர்ஷன் தெரபியா? பாட்டி கதை ஞாபகம் இருக்கா.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜூலி பதிலடி!
சென்னை: சர்வதேச போதை பொருள் ஒழிப்பை முன்னிட்டு இன்று போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். "ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் ட்ரக்ஸ்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் முதலமைச்சர் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ஓடினார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் பிக் பாஸ் பிரபலமான ஜூலி இது குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய உள்ளார்.

அதில், என்ன ஆதவ் அர்ஜுனா அண்ணா, காலையிலேயே டைவட் தெரப்பியை ஆரம்பித்து விட்டீர்கள் போல. இதுவரையில் வெள்ளை அறிக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தீங்க, திமுக ஊழல் செய்திருக்கு என்பதை உங்களால் நிரூபிக்க முடியவில்லை.
இதனால் அதை டைவட் செய்வதற்காக காலையிலேயே அவரை மூன்று கிலோமீட்டர் ஓடவிட்டு இந்தியாவிலேயே மூன்று கிலோமீட்டர் ஓடிய முதல் முதலமைச்சர் என்று சொல்லி இருக்கிறீர்களே உங்களுக்காக ஒரு உண்மையான விஷயத்தை சொல்கிறேன். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, 21 கிலோமீட்டர் மாரத்தானை 2 மணி நேரத்தில் ஓடி முடித்து இருக்கிறார். மாரத்தானுக்காவே ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்று இருக்கிறார்.

பிக் பாஸ் ஜூலி: அதேபோல ஹரியானா முதலமைச்சரும் மராத்தான் போடுவதில் கில்லாடி. அடுத்து கோவா முதலமைச்சர், அவ்வளவு ஏன் அமைச்சராக இருந்த மா சுப்பிரமணியன் அவர்கள் காலை நான்கு மணிக்கெல்லாம் பார்க்கிற்கு சென்று, குழந்தைகளை ஊக்குவிப்பார். அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் எல்லாம் மராத்தான் ஓடி இருக்கிறார். சும்மா ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், இந்த ஊழல் விஷயத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக காலையிலேயே ஒரு டைவெர்ஷன் தெரப்பியை தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஒரு மனுஷன், ஒன்று இரண்டு பொய்யை சொல்லலாம் இதுக்காக இப்படியெல்லாமா சொல்வது. நீங்க பாட்டிலோடு விமானம் ஏறிய கதை எல்லாம் எங்களுக்கு நினைவுக்கு வந்து போகுது. நீங்கள் எல்லாம் போதை பொருள் ஒழிப்புக்கு ஓடலாமா, இதெல்லாம் பெரிய தவறு இல்லையா.. என பிக் பாஸ் ஜூலி ஆதம் அர்ஜுனாவை கிண்டல் அடிக்கும் வகையில் பயங்கரமாக பேசியிருக்கிறார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications