கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பா? ஆதாரம் இருக்கு.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ஜல்லிகட்டை நடத்தக்கோரி 2017ம் ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் முகமது ஐக்ரீம் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜூலி தவெக தலைவர் விஜய் வேலூரில் சொன்ன குட்டி கதையை கண்டித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி,விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை கடுமையாக திட்டி வருகின்றனர். அதற்கு எல்லாம் கொஞ்சமும் பயப்படாத ஜூலி, விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் வீட்டில் இருப்பேன்... இல்லை என்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன்... இல்லை நான் வேண்டுமானால் பனையூர் வரட்டுமா என விஜய் பேசுவது போலவே வீடியோ போட்டு இருந்தார். இதற்கும் தளபதியின் ரசிகர்கள் கொந்தளித்து அவரை திட்டிவந்தனர்.

பிக் பாஸ் ஜூலி: இந்நிலையில், தற்போது பிக் பாஸ் ஜூலி பற்றி இணையத்தில் ஒரு ததவல் பரவி வருகிறது. ஜூலி கிட்னி திருட்டில் ஈடுபட்டு வருவதாக இணையத்தில் பலரும் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதாவது, ஜூலியும், அவரது கணவரும் சேர்ந்து ஒருத்தர் மட்டுமல்ல பல பேரிடம் கிட்னி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆதாரம் வெளியிட்ட பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவர் குடும்பத்தை போன் செய்து ஜூலி, இதுபற்றி யார் என்ன கேட்டாலும் தெரியாது என்று சொல்லிவிடு என மிரட்டி உள்ளனர். இதில் ஜூலி, தோழி ஷர்மி, ஜூலியின் கணவர், இன்னும் சில மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் சிலருடன் தொடர்புவைத்துக்கொண்டு, யாருக்கு கிட்னி தேவையோ அவர்களிடம் பணத்தை வாங்கி, கிட்னி கொடுப்பவர்களுக்கு கொடுக்காமல் அதில் பல லட்சத்தை சுருட்டி இருக்கிறார் ஜூலி.
ஆதாரத்துடன் விரைவில் புகார்: நான் இந்த வீடியோவை வெளியிட்டது, இது போல எனக்கும் நடந்து இருப்பதாக கூறியுள்ளார். நான் விஜய்யை பற்றி தவறாக பேசியதற்காக இப்படி சொல்லவில்லை. மக்கள் இதன்மூலம் நேரடியாக பாதிக்கப்படுவதால், எல்லாத்திற்கும் துணிந்து வீடியோ வெளியிட்டு உள்ளேன். இதுகுறித்து விரைவில் ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என பேசி இருக்கிறார். தற்போது, ஜூலி பற்றிய இந்த செய்தி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிலர் விஜய்யை பற்றி பேசினால் இப்படித்தான் அவதூறு பரப்புவீங்களா என ஜூலிக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை பகிர்ந்து வந்தாலும், சிலர் கூடிய சீக்கிரம் ஆதாரத்துடன் சிக்குவ என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜூலி இது குறித்து பரவி வரும் இந்த வதந்தி குறித்து ஜூலி விரையில் நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது.
Allegations of a kidney scam connected to @iMariaJuliana ’s friends are deeply concerning. 🚨 pic.twitter.com/nPLzqKoERR
— Suresh (@Suresh199104) March 2, 2026


Click it and Unblock the Notifications











