பார்த்து குழந்தை பயந்துடப்போகுது.. ’விக்ரம்’ பட குழந்தையுடன் விளையாடும் ஜூலி.. ரசிகர்கள்! கலாய்!

சென்னை: விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் பேரக் குழந்தையாக நடித்த குழந்தையுடன் பிக் பாஸ் ஜூலி கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன், காயத்ரி, ஸ்வாதிஷ்டா, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, மகேஷ்வரி மற்றும் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலகளவில் மிகப்பெரிய அளவில் விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

175 கோடி

175 கோடி

ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் 175 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை படைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நஷ்டத்தில் இருந்த தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமாத் துறை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெரிய படங்கள் வெளியாகி வரும் சூழலில் மிகப்பெரிய லாபத்தை பார்த்து வருகின்றன.

'விக்ரம்' குழந்தை

'விக்ரம்' குழந்தை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் அவருக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வஸ்திகா நடித்துள்ளார். அவர்களின் குழந்தையாக 'தர்ஷன்' எனும் ஒரு வயது கூட நிறைவடையாத குழந்தை நட்சத்திரம் ஒன்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

கமலுக்கு பேரன்

கமலுக்கு பேரன்

மகனை பறிகொடுத்த நிலையில், விக்ரம் எனும் பேரக் குழந்தையை கமல்ஹாசன் பாதுகாத்து வளர்க்கும் காட்சிகள். கமல் மார்பில் குழந்தையை போட்டுக் கொண்டு கண்களில் கண்ணீர் கசியும் காட்சிகள் என எமோஷனலாக படம் முழுக்க கமலுக்கும் படத்தில் அவருக்கு பேரக் குழந்தையாக நடித்துள்ள தர்ஷன் பாப்பாவுக்கும் கனெக்ட் ஆகி இருக்கும்.

விக்ரம் குழந்தையுடன் ஜூலி

விக்ரம் குழந்தையுடன் ஜூலி

எதிர்காலத்தில் அந்த குழந்தையும் பிளாக் ஸ்குவாடில் இணையும் என கமல் கூறும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸாக அமைந்திருக்கும். இந்நிலையில், பிக் பாஸ் ஜூலி தியேட்டரில் விக்ரம் படம் பார்த்துக் கொண்டிருந்த அந்த தர்ஷன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளார்.

பயந்துடப்போகுது

ஜூலியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள், விக்ரம் படத்தில் நடித்த அந்த குட்டிப் பாப்பாவா.. செம க்யூட்டா இருக்கானே என ரசிகர்கள் கொஞ்சியபடி கமெண்ட் போட, சில நெட்டிசன்கள், குழந்தைக்கு மிக அருகில் முகத்தை காட்டாதீங்க ஜூலி, பாப்பா பயந்துடப் போகுது என கலாய்த்து வருகின்றனர்.

விஜய்யுடன் நடிக்கணும்

விஜய்யுடன் நடிக்கணும்

சில யூடியூப் சேனல்களும் அந்த குழந்தையை பேட்டி எடுத்துள்ளன. குழந்தை தர்ஷனை பற்றி பல விஷயங்களை பெற்றோர் கூறியுள்ளனர். கமல் தனது சொந்த பேரனாகவே குழந்தையுடன் கொஞ்சி விளையாடினார் என்றும், அடுத்ததாக விஜய் படத்தில் எங்கள் மகன் நடிக்க வேண்டும் என ரொம்ப ஆசைப்படுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X