முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு.. கடுப்பான ஜூலி.. வதந்திக்கு முற்றுப்புள்ளி!
சென்னை: ஒரு பக்கம் பிக் பாஸ் பிரபலமான பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மறுபக்கம் நடிகை நிவேதா பெத்துராஜ், தனது நிச்சயதார்த்த போட்டோவை டெலிட் செய்திருக்கிறார். இப்படி ரெண்டுவிதமான செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், சிலர் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட்டு இணையத்தில் வதந்திகளை பரவி வருகின்றனர்.
நடிகை நிவேதா பெத்துராஜூக்கு ஆகஸ்ட் மாதம் ரஜித் இப்ரான் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோவை அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென, நிவேதா தனது நிச்சயதார்த்த போட்டோவை டெலிட் செள்துள்ளார். இதனால், நிவேதா பெத்துராஜும் தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

கடுப்பான ஜூலி: இது ஒரு பக்கம் இருக்க, ஜூலிக்கு இரண்டு தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதில் மாப்பிள்ளையின் முகத்தை காட்டவில்லை. அது யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு பலரும் ஆவலாக இருந்தனர். அதே நேரம் , புகைப்பட வீடியோவில் 'மெகஹரசைலா' பாடலை பின்னனி இசையாக அவர் வைத்திருக்கிறார். இதனால், ஜூலியின் வருங்கால கணவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று பலரும் பேசி வந்த நிலையில், நிவேதா பெத்துராஜ், தனது நிச்சயதார்த்த போட்டோவை டெலிட் செய்ததால், ஜூலியின் வருங்கால கணவரும், நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவரும் ஒன்று தான். அதனால், பெத்துராஜ் நிச்சயதார்த்ததை போட்டோவை டெலிட் செய்துவிட்டார் என இணையத்தில் ஒரு வதந்தி பரவியது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: இந்த வதந்தியால் கடுப்பான பிக் பாஸ் ஜூலி, ஆளைவிடுங்கப்பா சாமி என்று நிச்சயதார்த்த போட்டோவை ஷேர் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜூலி தான் காதலித்து வந்த முகமது என்பவரை தான் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். முகமது தற்போது ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம். மேலும் அவர் விஜய்டிவி யின் குக் வித கோமாளி, ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளிலும் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











