Vijay: நான் வீட்ல இருப்பேன் இல்லனா Offic-ல இருப்பேன்.. பனையூர் வரட்டுமா? விஜய் ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ஜூலி

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அத்இல் அவர் பேசியது தொடர்பாக விமர்சித்தும் அவர் சொன்ன குட்டிக்கதை தொடர்பாக விமர்சித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் பிக்பாஸ் ஜூலி. பிக் பாஸ் ஜூலி விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை காட்டமாக விமர்சித்தனர். மேலும் பலர் மிகவும் மோசமாக ஆபாச வார்த்தைகளில் எல்லாம் விமர்சித்தனர்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி. அதாவது, " விஜய் அண்ணா உங்களது வேலூர் பரப்புரை பேச்சை பார்த்துவிட்டு, அதில் ஒன்னும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டிருந்தேன். உடனே உங்களது ரசிகர்கள்.. ஆமாம், அவர்கள் ரசிகர்கள் தான். அவர்கள் இன்னும் அரசியல்வயப்படவில்லை. உங்கள் ரசிகர்கள் என்னை அனைத்து சமூக வலைதளப் பக்கத்திலும் என்னை கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மைனர் பசங்களிடம் இருப்பது முக்கால்வாசி போலி ஐடிகள் மட்டும் தான்.

Bigg Boss Julie Release The Video To Slams Vijay And Vijay Fans like Vijay Style
Photo Credit:

பயப்படமாட்டேன்: அதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன், எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை, என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன், இல்லை என்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்.

கமெண்ட்ஸ்: என்னைத் திட்டினால் என்னை திட்டுவது போல் தான். மக்களைத் திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை எனது வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்" என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூர் துயரச் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி.

Bigg Boss Julie Release The Video To Slams Vijay And Vijay Fans like Vijay Style
Photo Credit:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X