பிக்பாஸ் ஜூலியின் வருங்கால கணவர் இவர்தான்.. அட குக் வித் கோமாளி பிரபலம் ப்பா.. சஸ்பென்ஸை உடைச்சிட்டாங்க

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டாலும் தனது வருங்கால கணவரின் பெயரையோ, புகைப்படங்களையோ வெளியிடவில்லை. பலரும் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்த சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சசிகலா, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை தனது கோஷங்களால் வைத்து செய்த ஜூலி அனைவருக்கும் பரிச்சயமானார். அந்த சமயத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இவரையும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தது நிகழ்ச்சி தயாரிப்பு குழு. இவர் மட்டும்தான் அந்த சீசனில் திரைத்துறையை சேராதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தன்னால் முடிந்த அளவுக்கு நன்றாகவே ஆரம்பத்தில் விளையாடினார்.

ஓவியாவுடன் பிரச்னை: நிலைமை நல்லபடியாக போய்க்கொண்டிருக்க நடிகை ஓவியா விஷயத்தில் ஜூலி செய்த தகிடுதத்தத்தை அப்போதைய தொகுப்பாளர் கமல்ஹாசன் குறும்படம் போட்டு வெளிச்சப்படுத்தினார். அது ஓவியாவை மட்டுமின்றி அனைவரையுமே ஷாக்காக்கியது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனேகூட ஜூலிக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். அந்த விவகாரத்திலிருந்து ஜூலிக்கு பிக்பாஸில் இருந்த ரசிகர்களின் ஆதரவு அப்படியே தலைகீழாக மாறியது. ஜூலியும் ஒருகட்டத்துக்கு மேல் நிகழ்ச்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் எவிக்ட் ஆனார்.

Bigg Boss Julie Reveals Fianc s Name Cook With Comali Fame Mohammed Ikreem to Be Her Husband
Photo Credit:

திரைத்துறை வாய்ப்பு: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு இருக்கும் வெளிச்சம் காரணமாக திரைத்துறை கதவுகள் திறந்தன. அதனை பயன்படுத்தி சில படங்களில் நடித்தார். எப்படியும் திரைத்துறையில் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தாவது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓயாது பாடுபட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. ஆர்மபத்தில் கிடைத்த வாய்ப்புகள் ஒருகட்டத்துக்கு மேல் நின்றுவிட்டது.

திருமண நிச்சயதார்த்தம்: எனவே சினிமாவில் தலைகாட்ட முடியாமல் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கும் அவரது காதலருக்கும் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதில் அவர்களது உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டாலும் தன்னுடைய வருங்கால கணவரின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல் இருந்தார்.

வெளியிட்ட புகைப்படம்: அதனை பார்த்து யார் ஜூலியின் கணவராக இருப்பார் என்று பலரும் யோசித்தார்கள். இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவரின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஜூலியை திருமணம் செய்துகொள்ளப்போவது மொகமது ஐக்ரீம் என்பது தெரியவந்திருக்கிறது. இவர் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார். இரண்டு பேரின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X