அம்மன் தாயி.. சும்மாவே கலாய்ப்பாங்க இதுல இந்த 2வது டிரெய்லர்லாம் தேவையா ஜூலி?

பிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Julie in Big Boss 3: பிக் பாஸ் சீசன் 3யில் மீண்டும் ஜூலியா?.. திரும்பவும் முதல்ல இருந்தா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு புதிய தீனியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழுச்சி என பெயர் வாங்கிய ஜூலி, பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். அது தான் அவர் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக இருக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் பிரபலமானாலும், நெட்டிசன்களுக்கு அவர் எப்போதுமே காமெடி பீஸ் தான்.

சும்மாவே ஜூலியை கலாய்ப்பவர்களுக்கு, காலில் சலங்கை கட்டிவிட்டது போல வெளியாகி இருக்கிறது அம்மன் தாயி டிரெய்லர்.

பிக் பாஸ் முதல் சீசன்:

பிக் பாஸ் முதல் சீசன்:

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு நிகராக மக்களிடம் பிரபலமானவர் ஜூலி. ஆனால், பிக்ப் ஆஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம், அவர் மீதிருந்த நல்ல பெயரை கெடுத்து விட்டது. இருந்தபோதும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை அறுவடை செய்வதற்காக அவர் ஹீரோயினாக நடிக்க முடிவு செய்து தேர்ந்தெடுத்த படம் தான் அம்மன் தாயி. இந்த படத்தை சந்திரஹாசன் எழுதி இயக்கியுள்ளார்.

புதிய டிரெய்லர்:

புதிய டிரெய்லர்:

இப்படத்தில் அவர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போதே, நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். அவர்களது பேச்சுக்கு மேலும் தீனி போடுவது போல, அப்படத்தின் பர்ஸ்லுட், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது புதிய டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நோ டயலாக்:

நோ டயலாக்:

முதல் டிரெய்லரில் டயலாக் எல்லாம் வைத்திருந்தார்கள். அதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்தனர். எனவே, இந்த இரண்டாவது டிரெய்லரில் முழுபடத்தையும் ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு 2 நிமிடத்துக்கு கட் செய்தது போல் வெளியிட்டுள்ளனர். மருந்துக்குக்கூட ஒரு டயலாக் இல்லை.

ரம்யா கிருஷ்ணன்:

ஆனாலும் சும்மா இருப்பார்களா நமது நெட்டிசன்கள். தற்போது இதை வைத்தும் விதவிதமாக கலாய்த்து வருகின்றனர். டிரெய்லரின் பல காட்சிகள் ரம்யாகிருஷ்ணன் நடித்த அம்மன் படங்களின் சாயலை அப்படியே காப்பி அடித்தது போல் இருக்கிறது. ஜூலியும் கண்களை உருட்டி, ரம்யா போல் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது அவருக்கு வரவில்லை.

ஆஸ்கர் பார்சல்:

ஆஸ்கர் பார்சல்:

எனவே, ‘ஜூலி உனக்கு ஏன் இந்த வீண் வேலை, உன் இந்த நடிப்புக்கு ஐந்து ஆஸ்கர் பார்சல்' என ஆளாளுக்கு கமெண்ட் வெளியிட்டுள்ளனர். டிரெய்லரை இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ என கூறி வருகின்றனர். இருந்தபோதும், இந்த டிரெய்லரை இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மீண்டும் ஜூலி:

மீண்டும் ஜூலி:

பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் இரண்டு சீசன்களில் கலந்து கொண்டவர்களில் இன்னமும் மக்கள் மத்தியில் அடிக்கடி அடிபடும் பெயர் ஓவியா மற்றும் ஜூலி தான். அதிலும் ஜூலி தனது சமூகவலைதளப் பக்கத்தில் என்ன பதிவு போட்டாலும் அதனைக் கலாய்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. சில காலம் அவர்கள் ஜூலியை மறந்திருந்தார்கள். தற்போது அம்மன் தாயி டிரெய்லர் மூலம் மீண்டும் ஜூலி வாண்டடாக வண்டியில் ஏறிவிட்டார். இனி ஜூலியை வைத்து கொஞ்ச காலம் மீம்ஸ் மழை பொழிந்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X