ஜாக்கிரதை ஜூலி.. இதையும் மீரா மிதுன் காப்பின்னு சொல்லப் போறாங்க.. வைரலாகும் ‘பிளாக்’பிக்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி, இப்போ உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசியபடி எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் கருப்பர், வெள்ளை நிற போலீசார் ஒருவரால் நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில், Black Lives Matterக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக இந்த போட்டோஷூட்டை ஜூலி நடத்தி உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம்

செவிலியரான ஜூலி, சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் வீடு வரை கொண்டு வந்து சேர்த்தது. அதுவரை நடிகையாக இல்லாமல், இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவே மாறி விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி வாங்கிய அத்தனை பெயரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்காவாக டேமேஜ் செய்யப்பட்டது. நடிகை ஜூலியை காமெடி பீசாகவும், பித்தலாட்டம் செய்யும் பெண்ணாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். ஆனால், ஜூலியின் ரசிகர்கள் அவரது வெகுளி தனத்தை வெகுவாக ரசித்தனர்.

படங்களில்

படங்களில்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சில திரைப்படங்களிலும் நடிகை ஜூலி கமீட் ஆனார். நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஜூலி நடித்துள்ளார்.

வித விதமா போட்டோஷூட்

வித விதமா போட்டோஷூட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யாஷிகா ஆனந்த், மீரா மிதுன், சாக்‌ஷி அகர்வால் போல நடிகை மரியா ஜூலியும் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார். அவரது புகைப்படங்களுக்கு லைக்குகளும், ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

கருப்பு அழகு

கருப்பு அழகு

இந்நிலையில், உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் ஜூலி. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தற்போது வைரலாக்கி வருகிறார். செம அக்கா, சூப்பர், ஸ்டன்னிங் என்றும் அதற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

கருப்பின மக்களுக்காக

கருப்பின மக்களுக்காக

மேலும், இந்த போட்டோஷூட்டை நடிகை ஜூலி ஒரு உயர்ந்த காரணத்திற்காகவே எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். Black Lives Matterக்கு ஆதரவாக தனது சிறு முயற்சி என்றும், நிறத்திற்காக ஒரு மனிதரை வெறுப்பது என்பது கொடுமையான செயல், கருப்பும் ஒரு நிறம் தான் என்றும், கருப்பின மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Host? 2020 contestant List
ஜாக்கிரதை ஜூலி

ஜாக்கிரதை ஜூலி

ஜூலியின் இந்த போட்டோவை பார்த்த உடனே முதல் ஆளாக கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், ஜாக்கிரதை ஜூலி, மீரா மிதுன், உங்களையும் காப்பி கேட் என சொல்லிட போகிறார் என கமெண்ட் அடித்து கமெண்ட் செக்‌ஷனை கலகலப்பாக்கி உள்ளார். ஏற்கனவே மீரா மிதுன் போட்ட கருப்பு நிற போட்டோஷூட் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X