bigg boss julie : போற போக்க பாத்தா நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பீங்க போல.. ஜூலியை கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் ஜூலியின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
பாவம் இந்த ஜூலி என்ன செய்தாலும் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல் அவரை திட்டிதீர்த்து வருகின்றனர்.
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் தென்றல் வந்து என்னைத் தொடும் சீசன் 2ல் வில்லியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ஜூலி : பிக் பாஸ் ஜூலி என்றதும் நம் நினைவுக்கு வருவது குறும்படம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன்களை கடந்து வந்தாலும் முதல் சீசனில் பார்த்த அந்த குறும்படத்திற்கு ஈடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சும்மா நச்சென்று இருந்தது. அந்த குறும்படத்தில் வயிறு வலி என்று அழுது புலம்பிய ஜூலி. பேச்சை மாற்றி பேசி பின் குறும்படம் மூலம் வசமாக மாட்டிக்கொண்டார்.

பிக் பாஸ் அல்டிமேட் : இதையடுத்து, பங்கமாக அசிங்கப்பட்டு வெளியேறிய ஜூலிக்கு எங்கு போனாலும், மக்கள் வெறுப்பை காண்பித்தனர். இதையடுத்து, அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருவதாகவும், அதே போல ஓரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததாகவும் கூறி, தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தார்.

சீரியல் வில்லி : தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வில்லியாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசன் பிப்ரவரியில் முடிந்த நிலையில், இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெற்றி கேரக்டரில் வினோத் நடிக்க, அபி கேரக்டரில் பவித்ரா நடிக்கிறார். வெற்றியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் ஜூலி நடித்து வருகிறார்.

நயன்தாராவுக்கே டஃப் : சீரியலில் பிஸியாக நடித்தாலும், இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ஜூலி. விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் போற போக்க பாத்தா நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என ஜூலியை கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











