விஜய் அண்ணா நீங்க தான் சிஎம்.. மறந்துபோச்சா? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய ஜூலி!

சென்னை: கோவையில் 10 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து உடலை முட்புதரில் வீசிய சம்பவம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என சிறுமியின் உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து சற்று முன் முதல்வர் விஜய் சிறுமியின் குடும்பத்தினரிடம் போனில் ஆறுதல் கூறினார்.

சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பிறகு முதல்வர் ஆறுதல் கூறியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

CM Vijay Julie instagram
Photo Credit:

நீங்க தான் சிஎம்: தவெக தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது, விஜய் அண்ணா தான் சிஎம், இது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. கடந்த 10-15 நாட்களாகவே எங்கு பார்த்தாலும் மரணச் செய்திகள் தான் வருகிறது. இன்ஸ்டாகிராமில் எங்கு பார்த்தாலும் மரணக் ஓலமாகவே இருக்கிறது. கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் பீச்சுக்கு விளையாட சென்ற பெண் காணாமல் போய் கடைசில் அந்த பெண் இறந்துவிட்டாள். திருச்சியில் ஒரு செவிலியருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த செவிலியர் உயிரிழந்துள்ளார். இதனால் செவிலியர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ட்வீட் போடுறீங்க: ஆனால், விஜய் அண்ணா, இதற்கெல்லாம் நீங்கள் உட்கார்ந்து கொண்டு ட்வீட் போடுகிறீர்கள். ட்வீட் போடுவதற்காக மக்கள் உங்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்? எங்களுக்கு ட்விட்டரில் ட்வீட் போடவும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கவும் தெரியாதா? களத்தில் வந்து இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாதா. உங்கள் ஆட்சி இதெல்லாம் நடக்காது என்று நம்பித்தானா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்? எங்கள் அண்ணன் ஆக்ஷன் ஹீரோ என்று நம்பித்தானே ஓட்டு போட்டார்கள்? அவர்களுக்கு இப்படி கையை விரித்து காட்டுகிறீர்களே இது நியாயமா? உங்கள் அமைச்சர்கள் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் இது அரசியல் என்று கூறுகிறார்கள். கோயம்புத்தூர் சிறுமிக்கு என்ன ஆனது என்று கேட்டால் இது அரசியல் என்று சொல்கிறார்கள். மற்றொரு அமைச்சருக்கு என்ன துறை கொடுத்தீர்கள் என்று கூட தெரியவில்லை.

மக்கள் அழுவது காதில் கேட்கவில்லையா?: பல இடங்களில் மின்சாரம் இல்லை. இப்படி மக்களை கஷ்டப்படுத்தவா அரசியலுக்கு வந்தீர்கள்? முதலமைச்சரானீர்கள்? தவெகவிற்கு ஓட்டு போடுங்கள், விஜய் அண்ணாவை சிஎம் ஆனால் அனைத்தையும் மாற்றி விடுவார் என்று இன்ஸ்டாகிராமில் சொன்னார்கள் எல்லாம் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. மக்கள் கதறி அழுவது உங்கள் காதில் கேட்கவில்லையா? களத்தில் வந்து பேசுங்கண்ணா என ஜூலி கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read more about: julie instagram ஜூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X