Vijay: நான் திரும்பவும் சொல்றேன் 50ஐ 500 ஆக மாற்றி விட்டுடாதீங்க.. விஜய்யை மீண்டும் விளாசிய ஜூலி!
சென்னை: நடிகர் விஜய்யின் வேலூர் பேச்சை கேட்ட பின்னர் நடிகையும் சின்னத்திரை பிரபலமுமான ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை காட்டமாக விமர்சித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷன் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் பலவற்றிலும் விஜய் ரசிகர்களும் தவெக ஆதரவாளர்களும் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மோசமாக விமர்சித்தனர். இது தொடர்பாக ஜூலி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆனாலும் ஜூலி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான வாக்குவாதம் நின்றபாடில்லை. அதேநேரத்தில் தவெக தரப்பில் நடக்கும் ஏதாவது ஒரு மிஸ்டேக் கிடைத்தாலும், அது தொடர்பாக ஜுலி காட்டமான விமர்சனத்தை முன் வைத்துக் கொண்டே வந்தார். விஜய்யை விமர்சித்த முதல் வீடியோவில் ஜூலி கூறியது, விஜய் அண்ணா நீங்கள் கூறும் கதையை கேட்டுவிட்டு உங்களது ரசிகர்கள் ஏதாவது ஏடாகூடமாக செய்தால் அதனால் அவர்கள் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆவது? போதும் அண்ணா, உங்களால் 50 பேர் இறந்தது போது, அந்த எண்ணிக்கையை 500 ஆக மாற்றி விட்டுவிடாதீர்கள் என்று பேசி இருந்தார்.

இந்நிலையில், " கடந்த 4ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் விக்னேஷ், விஜய் வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து செல்வதில் கவனமாக இருந்ததால் சாலை ஓரமாக நின்று கொண்டு இருந்த காவல்துறை வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் விக்னேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த அந்த மாணவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை பலருக்கும் உண்டாக்கியது.
விளாசிய ஜூலி: இப்படி இருக்கையில் மாணவர் விக்னேஷ் உயிரிழப்பு குறித்து நடிகர் விஜய்யை விமர்சித்து ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " ஐம்பது, 50 ஆகவே இருக்கட்டும் அதை 500 ஆக மாற்றி விட்டுவிடாதீர்கள் என்று சொன்னதற்கு வல்கர் வாரியர்ஸ் கமெண்ட் செக்ஷனில் வந்து பொங்கு பொங்கு என்று பொங்கினார்கள். இன்றைக்கு ஒரு மாணவர் இறந்துவிட்டார். இதை வைத்து அரசியல் பேசக்கூடாது என்று இருந்தாலும் மனது கேட்கவில்லை.
யாருக்கு நஷ்டம்: ஆசையாக உங்களைப் பார்க்க வந்துதானே அந்த மாணவர் காவல்துறை வாகனத்தில் மோதி இறந்துவிட்டார். யாருக்கு நஷ்டம்? பெற்றவர்களுக்குத்தானே நஷ்டம். உங்களுக்கு என்ன அண்ணா, நீங்க ஜாலியாக நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்வீர்கள். நீங்களும் ஜாலியாக இருங்கள். நான் திரும்பவும் சொல்றேன் ஐம்பது, 50 ஆகவே இருக்கட்டும் அதை 500 ஆக மாற்றி விட்டுவிடாதீர்கள். உடனே எங்களை குறை கூறாதீர்கள், நாங்கள் அனைத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்.

பயந்து ஓடவில்லை: 41 பேர் இறந்த போது செய்தியாளர்களை சந்திக்க முடியாமல், பயந்து ஓடவில்லை. உடனே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். யாரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை தெரியுமா? உங்களின் வல்கர் வாரியர்ஸிடம் இருந்துதான் பாதுகாப்பு இல்லை. எனது கமெண்ட் செக்ஷனைப் பாருங்கள் தெரியும்" என்று காட்டமாக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











