விஜய் அண்ணா இறந்தவங்க எண்ணிக்கை 50ஆகவே இருக்கட்டும்.. 500 ஆக மாத்திவிட்டுடாதீங்க.. ஜூலி விளாசல்

சென்னை: நடிகர் விஜய் தனது வேலூர் பிரச்சாரத்தில் சொன்ன குட்டி ஸ்டோரியை மிகவும் காட்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விஜய் அண்ணா தமிழக வெற்றிக் கழகத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 50ஆகவே இருக்கட்டும், நீங்க சொல்லும் கதையைக் கேட்டு உங்களின் ஆர்வக்கோளாறான ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு புல் கொடுக்கிறேன் என்று சென்று, ஏதாவது ஏடாகூடமாகி, எண்ணிக்கை 500 ஆக மாறிவிடப் போகிறது என்று தெரிவித்துள்ளார். ஜூலி இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Bigg boss Julie Slams Vijay Kutty Story At Vellore TVK Metting About Jallikattu Kaalai

ஜூலி பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “ ஹாய் அண்ணா.. ஜூலி. இப்போதுதான் உங்களது வேலூர் பரப்புரை பேச்சைப் பார்த்தேன். வழக்கம் போல் அதில் எதுவும் இல்லை என்று பார்த்துக் கொள்ளுங்களேன். ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டிக் கதை நீங்கள் சொன்னதைக் கேட்டதில் இருந்து அதற்கு பதில் அளிக்காமல் இருக்கவே முடியவில்லை. நீங்க பாட்டுக்கு போகிற போக்கில், ஒரு ஜல்லிக்கட்டு காளை இருந்துச்சு, அதுக்கு ஒர் குழந்தை புல்லுகட்டு கொடுத்துச்சு என்று சொல்லிவிட்டு போய்விடுவீர்கள். உங்களது கட்சியில் இருப்பவர்கள் பலபேர் மைனர் ஆளுங்கள். அவங்களும் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டை காட்டுகிறேன் என்று சொல்லி, ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட்டது என்றால் என்ன அண்ணா செய்வது. ஐம்பது ஐம்பதாகவே இருக்கட்டும் அண்ணா, 500-ஆக ஆக்கிவிடாதீர்கள்.

எல்லாரும் கஷ்டப்பட்டு, ஜல்லிக்கட்டு உரிமை வாங்கி வைத்துள்ளோம், அது முறையகாவும் நடைபெற்று வருகிறது. உங்களோட ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டு காட்டுகிறேன் என்று கூறி, ஏதாவது ஆகி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டால், திரும்பவும் போராட எல்லாம் தெம்பு இல்லை அண்ணா. கொஞ்சம் பார்த்து பக்குவமா பண்ணுங்க அண்ணா, உங்க இஷ்டத்துக்கு பேசீட்டு போய்விடாதீங்க அண்ணா” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், ”கேள்வி கேட்பது எதிர்ப்பு இல்லை - ஜனநாயக உரிமை. பிரபலமா இருப்பது ஒரு விஷயம்... வழிநடத்துவது வேறொரு பொறுப்பு” என்றும் தனது வீடியோவுக்கு கேப்ஷன் இட்டுள்ளார்.

ஜூலியின் இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இவர்களின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X