பிக்பாஸ் ஜூலிக்கு ஜனவரி 16ல் திருமணம்.. அந்த தேதியை ஃபிக்ஸ் செய்ய இதுதான் காரணமா?.. மேடம் பழசை மறக்கல போல
சென்னை: ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமடைந்த ஜூலி; அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அந்த சீசனில் பாதியிலே வெளியேறிய அவர்; அதனையடுத்து சில படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் அவருக்கும், முகமது ஐக்ரீமுக்கும் ஜனவரி 16ஆம் தேதி திருமணம் நடக்கிறது. அந்தத் தேதியை ஏன் ஃபிக்ஸ் செய்தார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால்; மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக கூடி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 2017ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் பரவலான கவனத்தை பெற்றவர் ஜூலி. செவிலியான ஜூலி; அந்தச் சமயத்தில் அரசியல் தலைவர்களை எல்லாம் தனது கோஷங்களால் விளாசிவிட்டார். ஓபிஎஸ், சசிகலா என ஒருவரையும் அவர் விட்டுவைக்கவில்லை. இதன் காரணமாக ஒரே நைட்டில் பிரபலமானார்.
பிக்பாஸ் ஜூலி: அந்தப் போராட்டம் முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்டபோது ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவுகள் நிறையவே இருந்தன. ஆனால் ஓவியாவிடம் அவர் செய்ய தகிடுதத்தங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த ஆதரவு அலைகள் வற்றி போயின. கமல்ஹாசன்கூட ஜூலியை அந்த நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. மக்கள் ஆதரவு குறைந்ததன் காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட்டும் ஆனார்.

சினிமா மற்றும் சின்னத்திரை: பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்தவகையில் சில படங்களில் நடித்த விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சினிமாவிலோ அல்லது சின்னத்திரையிலோ எப்படியாவது நன்றாக வளர்ந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று கணக்கு போட்டிருந்த அவருக்கு; அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் அவருக்கு முகமது ஐக்ரீம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அவரும் ஜூலியுடன் பிக்பாஸில் கலந்துகொண்டவர்தான். இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்த சூழலில்; இரண்டு பேருக்கும் ஜனவரி 16ஆம் தேதி சென்னை பரங்கி மலையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாள் இரவு 7 மணியளவில் வரவேற்பும் நடக்கிறது.
என்ன காரணம்?: இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதியை பிக்பாஸ் ஜூலி தனது திருமணத்துக்கு ஃபிக்ஸ் செய்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடங்கவிருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழடைந்த ஜூலி ஜல்லிக்கட்டு தொடங்கும் நாளிலேயே தனது திருமண நாளை தொடங்குவதற்காகத்தான் அந்த தேதியை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டமும் இதே காலகட்டத்தில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கவனித்த ரசிகர்கள், 'ஜூலி மேடம் பழசை மறக்கவில்லை' என்று கமெண்ட்ஸ் செய்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











