நான் ‘குடிகாரி‘ இல்லை...நடிகை காஜல் பசுபதியின் நச் பதில்!

சென்னை : ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நடிகை காஜல் பசுபதி பேட்டியில் பதிலளித்துள்ளார்.

சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி சன் மியூசிக் சேனலில் விஜேவாக மீடியாவிற்குள் நுழைந்தார்.

இதையடுத்து, நடிகை காஜல், வசூல்ராஜா எம்பிபிஎஸ், இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காஜல் பசுபதி

காஜல் பசுபதி

படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் தனியாகவே இருக்கிறார்.

சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக

சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக

இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி, அண்மையில் அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், சாண்டியை பிரிய நான் தான் காரணம். சாண்டியை குற்றம் சொல்லவே முடியாது. விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இன்று வரை இருந்து வருகிறேன்.

நான் அப்படி இல்லை

நான் அப்படி இல்லை

என்னை பார்க்கும் பலர் பேசுவதற்கே பயப்படுவார்கள். மேலும், எப்போது குடித்துக்கொண்டே இருப்பாள் சரியான குடிகாரி என்றும் கூறுவார்கள். ஆனால், நான் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்க மாட்டேன், பார்ட்டி, பப்,பிரண்ஸ் பார்ட்டி சென்றால் தான் குடிப்பேனே தவிர ஷூட்டிங், பேட்டியில் குடித்துவிட்டு வரமேட்டேன். என் வேலையை மதிக்கிறேன் அதனால் எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்.

வாழாவெட்டி

வாழாவெட்டி

அதைவிட விவாகரத்துக்கு பின் சொந்தம், பந்தம் அனைவரும் என்னை வாழாவெட்டி என்று சொல்வார்கள் என் அம்மாவும் என்னை அப்படித்தான் அழைப்பாங்க. நல்ல வாழ்க்கையை தொலைச்சிட்ட தொலைச்சிட்டேனு. ஆனால், நான் இந்த வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கிறேன் என்று எத்தனை முறைசொன்னாலும் அவங்களுக்கு புரியவில்லை.

இரண்டாவது திருமணம் எப்போது?

இரண்டாவது திருமணம் எப்போது?

இரண்டாவது திருமணம் எப்போது எப்போது என பலர் கேள்வி கேட்கிறார்கள், நான் நிறைய லவ் பண்ணி இருக்கிறேன். ஆனால், எந்த ஆணும் நம்பிக்கையா என்னிடம் நடந்து கொள்ளவில்லை. இதனால், ஆண்கள் மீது நம்பிக்கை போய் விட்டதால், திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. இப்போது என் வாழ்க்கை மகிச்சியாகத்தான் இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X