மருத்துவமனையில் ஓரிரு நாள் தங்கியிருப்பார்..கமல்ஹாசன் உடல் நிலை மருத்துவமனை அறிக்கை..பிக்பாஸ்?

நடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக படபிடிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில் சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்து வந்தது.

இதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் மேலும் ஓரிரு நாட்கள் தங்கியிருப்பார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 68 வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்

68 வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஐ கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அப்போது நுணுக்கமாக சில விஷயங்களை அவர் பாணியில் கேட்டு அதற்கு உரிய அறிவுரைகளையும் கமல் வழங்கினார். கமல்ஹாசன் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர். ஒரு ஐகானாக தமிழ் சினிமாவில் இருப்பவர்

 இந்தியன் 2, மணிரத்னம் படம் ஷூட்டிங்

இந்தியன் 2, மணிரத்னம் படம் ஷூட்டிங்

தற்போது இந்தியன் 2 படத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து 68 வயதிலும் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். கமல்ஹாசன், அடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில் மணி ரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் உண்டு. சமீபத்தில் அவர் ஐதராபாத் சென்று வந்தார். சென்று வரும்போதே அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. சளித்தொல்லையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

 சளி காய்ச்சலால் படபிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் மருத்துவ பரிசோதனை

சளி காய்ச்சலால் படபிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக மருத்துவரை பார்த்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் இது தொடர்ந்தால் படபிடிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதால் உடல் பரிசோதனை செய்ய முடிவெடுத்தார். உடனடியாக நேற்று மாலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்.

 போரூர் மருத்துவமனையில் அனுமதி

போரூர் மருத்துவமனையில் அனுமதி

இங்கு சளி, காய்ச்சலுக்காக உடல் பரிசோதனையும், வேறு ஏதாவது பிரச்சினை இருக்க வாய்ப்பிருந்தால் அதையும் பரிசோதனை செய்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்ததை அடுத்து மருத்துவமனையில் இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை இன்னும் ஓரிரு நாள் தங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஓரிருநாள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரச்சினை?

ஓரிருநாள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரச்சினை?

இன்று காலை முழு உடல் பரிசோதனைக்கு பின் அவரது உடல் நிலை சரியாகிவிட்டது. ஆனாலும் ஓரிரு நாள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து இன்று காலை கமல்ஹாசன் வீடு திரும்புவதாக இருந்த நிலையில் மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓரிரு நாள் கமல்ஹாசன் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என ராமச்சந்திரா மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம் கொரோனா தாக்குதலின்போதே மருத்துவமனையிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நடத்தியதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார். ஆகவே அவரது மன உறுதி முன் அனைத்தும் எளிதாக நடக்கும், எனவே இது சாதாரண காய்ச்சலுக்கான பரிச்சோதனைக்கான அனுமதியே என அவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Read more about: actor kamal haasan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X