Bigg Boss: பிக் பாஸ் 11 கன்னடா.. 120 நாள் போராட்டம்.. டைட்டிலுடன் 50 லட்சத்தை வென்ற போட்டியாளர் இவரா?

பெங்களூரு: உலகப் புகழ் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இந்த ஆண்டு தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டைட்டில் வின்னராக முத்துகுமரன் தேர்வானார். அவருக்கு டைட்டிலுடன் ரூபாய் 40.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் பிக் பாஸ் கன்னடம் சீசன் 11இன் டைட்டில் வின்னராக ஹனுமந்தா தேர்வாகியுள்ளார். மொத்தம் 120 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டி நிறைந்த சீசனின் வெற்றியாளராக அவர் தேர்வாகியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் கன்னடா சீசன் 11 நிகழ்ச்சி, முதல் வாரத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறைந்த பட்சம் 100 நாட்கள் அதிக பட்சம் 108 நாட்கள் வரை நடைபெறும். ஆனால் இந்தமுறை கன்னடா சீசன், 120 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக போனதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இப்படி இருக்கும்போது, இந்த சீசனின் டைட்டிலை வெல்ல இறுதியாக 6 போட்டியாளர்களிடையே கடும் போட்டி இருந்தது. யார் டைட்டிலை வெல்லுவார் என ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் குழப்பம் இருந்தது. காரணம் இம்முறை போட்டியாளர்கள் பலரும் மக்களின் மனங்களை வென்ற போட்டியாளர்களாக மாறிப்போனார்கள். ஆனால் இதில் ஹனுமந்தா வெற்றி பெற மற்றவர்களைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.

bigg boss kannada bigg boss hanumantha

டாப் 6: இறுதி வாரத்தில் உக்ரம் மஞ்சு, திரிவிக்ரம், ரஜத், மோஷிதா பாய், பவ்யா கவுடா மற்றும் ஹனுமந்தா பர்ஜாரி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் பவ்யா கவுடா ஐந்தாவது ரன்னர் -அப் இடத்தையும், உக்ரம் மஞ்சு 4வது ரன்னர்-அப் இடத்தையும் பெற்றார். மோஷிதா பாய் மூன்றாவது ரன்னர்-அப் இடத்தையும் பெற்றார். இதனால், மீதம் இருந்த மூவரான உக்ரம் மஞ்சு, திரிவிக்ரம் மற்றும் ஹனுமந்தா பர்ஜாரி என இவர்களில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

வைல்ட் கார்டு: வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் பிக் பாஸ் கன்னடம் சீசன் 11க்குள் சென்ற ஹனுமந்தா தனது அப்பாவித்தனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஏற்கனவே இருந்த போட்டியாளர் ஜெகதீஷ் எலிமினேட் ஆன பின்னர், ஹனுமந்தா வீட்டிற்குள் சென்றார். இதனால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாகச் சென்றது. ஹனுமந்தாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால், சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தார். போட்டி இறுதி கட்டத்தினை நெருங்க நெருங்க திரிவிக்ரம் மற்றும் ஹனுமந்தா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஹனுமந்தா டைட்டிலை வென்றுள்ளார். இது மட்டும் இல்லாமல், அவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 50 லட்சமும் டைட்டிலுடன் வழங்கப்பட்டுள்ளது.

bigg boss kannada bigg boss hanumantha

டைட்டில் வின்னர்: வெற்றி பெற்ற பின்னர், ஹனுமந்தா பேசும்போது நான் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வரவில்லை. வேடிக்கை பார்க்கலாம் என்றுதான் வந்தேன். ஆனால் மக்களை என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள் எனக் கூறினார். இவருக்கு சுமார் 5 கோடிக்கும் அதிகமான வாக்குகள் விழுந்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்த திரிவிக்ரம் 2 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்ற போட்டியாளர் டைட்டிலை வென்றுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7இன் டைட்டில் வின்னரான அர்ச்சனா, வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்றவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X