அப்பாவாக கலக்கிய கவின்.. டாடா திரைப்படத்தின் 3ம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் கவின் நடிப்பில் திரையரங்கில் வெளியான 'டாடா' படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால், படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

நடிகர் கவின்

நடிகர் கவின்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவை காதலிப்பதாக சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறிய கவின், வெளியே வந்த பின் லாஸ்லியாவை சந்திக்கவே இல்லை.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

பிக் பாஸ்க்கு பின் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் கவின் நடிப்பில் கடந்த ஆண்டு லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஐடி நிறுவனங்கள் பணத்தை வாரி வாரி கொடுத்துவிட்டு திடீரென, வேலையில் இருந்து துரத்திவிட்டால், அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்பதை திகிலூட்டும் த்ரில்லர் கதையாக இப்படம் இருந்தது. இப்படத்தில், கவின், அமிர்தா ஐயர், காயத்ரி ரெட்டி, ராகுல் தாத்தா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

திருமணத்திற்கு முன் கர்ப்பம்

திருமணத்திற்கு முன் கர்ப்பம்

லிப்ட் படத்தைத் தொடர்ந்து ஒரு வருட இடைவேளைக்கு பின் கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டாடா. காதலர்களாக சுற்று வரும் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் திருமணத்திற்கு முன்பே எல்லை மீறி பழகி தவறு செய்து விடுகிறார்கள். இதனால், தாய்மை அடையும் அபர்ணா, கருவைக் கலைக்க மறுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் பிரிந்து தனியாக வாழ்கின்றனர்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

வறுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து ஆத்மார்த்தமான காதல் காணாமல் போய்விடுகிறது. குழந்தை பெற்ற பின் அபர்ணா பெற்றோருடன் சென்றுவிட குழந்தையைத் வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறான் கவின். பிறகு என்ன ஆனது என்பது தான் டாடா படத்தின் கதை. வழக்கமான கதையைப் போல் இல்லாமல்,டாடா திரைப்படம் சற்று வித்தியாசமாக இருப்பதால், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்

பிப்ரவரி 10ந் தேதி வெளியான இப்படத்திற்கு முதல் நாளில் வசூலில் மந்தமாகவே இருந்தது. அடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. இதனால் டாடா படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் கவினுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X