Dada Box Office: பாசிட்டிவ் விமர்சனங்கள்.. பிக் பாஸ் கவினின் ’டாடா’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள டாடா படம் முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

கவின் லாஸ்லியா பிரிவு

கவின் லாஸ்லியா பிரிவு

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை திட்டியதும் கவினை காதலிப்பதையே நிறுத்தி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சினிமாவில் பிசியான நடிகர்களாக மாறி உள்ள நிலையில், இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இதுவரை இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் அம்ரிதாவுடன்

பிகில் அம்ரிதாவுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் பேய் படம் அவருக்கு நல்ல வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதாவுடன் இணைந்து அந்த படத்தில் நடித்து இருந்தார் கவின்.

பீஸ்ட் அபர்ணா தாஸ்

பீஸ்ட் அபர்ணா தாஸ்

பிகில் படத்தை போலவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் உடன் ஜோடி போட்டு தற்போது டாடா படத்தில் நடித்து உள்ளார் கவின். அவருக்கு என்றே இப்படி அமைகிறதா என்னவோ தெரியவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கவின் மற்றும் அபர்ணா தாஸின் நடிப்பு டாடா படத்தில் அற்புதம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

வெள்ளிக்கிழமை வெளியான டாடா படத்தை பார்த்த பலரும் நல்ல படம் என்றும் செம ஜாலியாக இருக்கு, கவின் சிறந்த நடிப்பை கொடுத்து நம்மை அழ வைத்து விட்டார் என பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி படத்திலும் கவின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

தமிழ்நாட்டில் டாடா படத்தின் முதல் நாள் வசூல் 2.35 கோடி என்றும், கர்நாட்காவில் 8 லட்சம் ரூபாயும், கேரளாவில் 2 லட்சம் ரூபாயும் ஓவர்சீஸில் 20 லட்சம் ரூபாயையும் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக உலகளவில் கவினின் டாடா திரைப்படம் 2.65 கோடி எனக் கூறப்படுகிறது. கவின் படத்துக்கு ஓபனிங்கே நன்றாக உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் டாடா படம் மேலும், கலெக்‌ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X