பாலாங்கிற ரெண்டெழுத்த தவிர வேற எந்த கழுதையும் எழுதத் தெரியாதாம்.. ஷிவானி ரியாக்ஷன பார்க்கணுமே!
சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ளதை முன்னிட்டு, தற்போது இன்னொரு சூப்பரான புரமோ வெளியாகி உள்ளது.
முதல் புரமோவில் விவசாயிகள் ஆரிக்கு பரிவட்டம் கட்டிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இன்று வெளியான புரமோவில் ரம்யா பாண்டியனின் ஆர்மி அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை பார்த்தோம்.

பாலா ஸ்பெஷல்
இந்நிலையில், தற்போது பாலாவுக்கான ஸ்பெஷல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இளம் பெண்கள் பாலாவை மொய்த்துக் கொண்டு செய்யும் அரட்டைகளும் சேட்டைகளும் எல்லைகளே இல்லாத அளவுக்கு இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன. சந்தோஷத்தின் உச்சியிலே பாலா என்ன செய்வதென்றே தெரியாமல் சிரித்து மழுப்புவது செம!

பாலா மாமா
பிக் பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணன் தான் பாலா மாமா பாலா மாமான்னு அவர் பின்னாடி திரிந்தார் என ரம்யா பாண்டியன் கலாய்த்து இருந்தார். இந்நிலையில், இந்த புரமோவில் இளம் பெண்கள் மொத்தமாக மொய்த்துக் கொண்டு பாலாவை கொண்டாடுவதும், அதில் ஒரு பெண் பாலா மாமா எனக் கூப்பிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியும் உள்ளார்.

பாலாங்கிற ரெண்டெழுத்த தவிர
பாலா நீங்க அழுததை எங்களால பார்க்கவே முடியலை என்றும், பாலா ஒரு குழந்தை மாதிரி என்றும் ஏகப்பட்ட பெண்கள் வழிந்த நிலையில், எல்லாரையும் விட ஒரு இளம் பெண், "பாலாங்கிற ரெண்டெழுத்த தவிர வேற எந்த கழுதையும் தெரியாது" என பெரிய பிட்டாகவே போட்டது தான் ரொம்ப ஓவர்.

ரியோ ரியாக்ஷன்
அந்த இளம்பெண் சொன்னதை பார்த்ததும் ரியோ கொடுத்த ரியாக்ஷன் இருக்கே வேற லெவல். பிக் பாஸ் கொண்டாட்டத்தை பாலா ரொம்பவே என்ஜாய் செய்துள்ளார் என்பது இந்த புரமோவை பார்த்தாலே தெரிகிறது. என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என பாடி தனது ரசிகைகளை மகிழ்வித்துள்ளார்.

கடுப்பில் ஷிவானி
பாலாஜி முருகதாஸை ஷோ முழுவதும் சுற்றி சுற்றி வந்த ஷிவானி நாராயணன் கடைசி வாரங்களில் அவங்க அம்மா வந்து திட்டிச் சென்ற பிறகு பாலாவை விட்டு விலக தொடங்கினார். என்னைப் பத்தி எப்படி தப்பா பேசுவ என ரீ என்ட்ரி கொடுத்த போதும் பாலாவுடன் சண்டைப் போட்டார். இந்நிலையில், பாலாவை சுற்றி இத்தனை பெண்கள் இருப்பதை பார்த்து ரொம்பவே கடுப்பாகி உள்ளார் என நெட்டிசன்கள் அவரது ரியாக்ஷனை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











