கவினுக்கும் எனக்கும் என்ன உறவு...பதிலளித்த லாஸ்லியா கொடுத்த அதிரடி ஷாக்
சென்னை : பிக்பாஸ் 3 சீசனில் அதிகம் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா மரியநேசன் தான். இலங்கை தமிழ் செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
Recommended Video

பிக்பாஸ் வீட்டிற்குள் கவினும், லாஸ்லியாவும் தங்கள் காதல் பற்றி பேசவில்லை என்றாலும் வெளியில் நெட்டிசன்கள் அதை பற்றி தான் அதிகம் பேசினர். சமூக வலைதளங்களில் பல ஹாஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு அவை டிரெண்டிங்கும் ஆக்கப்பட்டன.
அதிகம் பேசப்பட்ட ஜோடி
பிக்பாஸ் வீட்டிற்குள் கவினும், லாஸ்லியாவும் தங்கள் காதல் பற்றி பேசவில்லை என்றாலும் வெளியில் நெட்டிசன்கள் அதை பற்றி தான் அதிகம் பேசினர். சமூக வலைதளங்களில் பல ஹாஷ்டாக்கள் உருவாக்கப்பட்டு அவை டிரெண்டிங்கும் ஆக்கப்பட்டன.
அதிக பட வாய்ப்புகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிற லாஸ்லியாவும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினும் சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தும் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன உறவு என்பது பற்றி இப்போதும் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடுப்பான லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக இப்போது தான் கவின் உடனான உறவு பற்றி லாஸ்லியா பேசி உள்ளார். இது பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், அது எங்களின் தனிப்பட்ட விஷயம். மக்கள் எனது படங்கள் பற்றி மட்டும் கேட்டால் போதும். கவினுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றி யாரும், எங்கேயும் பேச வேண்டிய அவசியமில்லை என்றார்.
தர்ஷன் எனக்கு பிரதர்
தற்போது நானும் தர்ஷனும் படம் ஒன்றில் ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளோம். தனிப்பட்ட வாழ்க்கையில் இல்லை. அவர் எனது சகோதரரை போன்றவர். நாங்கள் இருவரும் படத்திற்காக சேர்ந்து நடிக்க உள்ளோம். அவ்வளவு தான் என்றார்.


Click it and Unblock the Notifications