ஜஸ்ட் எஸ்கேப்.. பிக் பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பிய பிரபல நடிகை.. டிஆர்பி படுத்தும் பாடு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருந்த நிலையில் ஜஸ்ட் எஸ்கேப்பாகி இருக்கிறார், பிரபல நடிகை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, இதுவரை 48 நாட்களை கடந்துள்ளது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிலர் வெளியேற, சிலர் புதிதாக என்ட்ரியாகி இருக்கின்றனர்.

அறிவிப்பார் என்கிறார்கள்
கமல், ஒவ்வொரு வாரமும் கலக்கலப்பாகப் பேசி வருகிறார், போட்டியாளர்களுடன். இந்த வாரம் சிலர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டலாம் என்று கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய தகவல் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. கமல் அறிவிப்பார் என்கிறார்கள்.

முடிவை நெருங்கி
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. தெலுங்கு பிக் பாஸ், முடிவை நெருங்கி கொண்டி ருக்கிறது. நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். ஆட்டம், பாட்டம், சென்டிமென்ட், சோகம் என சென்று கொண்டிருக்கிறது நிகழ்ச்சி.

அசத்தல் கிண்டல்
இயக்குனர்கள் சூர்யகிரண், அம்மா ராஜசேகர் உட்பட சிலர் வெளியேறிவிட்டாலும் அசத்தல் கிண்டலுக்கும் நையாண்டிக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில், மேலும் சிலர் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நடிகை மோனல் கஜ்ஜார்தான்.

சிகரம் தொடு
இவர், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

குறைவான வாக்கு
இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அகில், இது வெறும் நட்புதான் என்கிறார். இதற்கிடையே குறைவான வாக்குகளை பெற்றுள்ள நடிகை மோனலும் மற்றொரு போட்டியாளருமான லாஸியா மஞ்சுநாத்தும் இந்த வாரம் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்பட்டது.

ஜஸ்ட் எஸ்கேப்
இதற்கிடையே, லாஸியா மஞ்சுநாத் வெளியேறிவிட, ஜஸ்ட் எஸ்கேப் ஆகி இருக்கிறார், நடிகை மோனல். அவர் வெளியேறாமல் இருப்பதற்கு அகில்தான் காரணம் என்கிறார்கள். மோனல் வெளியேறிவிட்டால், டிஆர்பி ரேட் இறங்கிவிடும் என்பதால், அவரை வெளியேற்றாமல் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











