பிக் பாஸ் மலையாளம் 3யோட வின்னர்... புது விதத்துல செலக்ட் பண்ணப் போறாங்களாம்
சென்னை : பிக் பாஸ் மலையாளம் 3 ஷோ சமீபத்தில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஏறக்குறைய இந்த ஷோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதன் வின்னரை இதுவரை இல்லாதவகையில் செலக்ட் செய்ய குழு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பையும் ஒரு டீசர் மூலம் அறிவித்துள்ளது.

இறுதிகட்டத்தில் நிறுத்தப்பட்ட ஷோ
மலையாளத்தின் பிக் பாஸ் சீசன் 3 ஷோ சென்னையில் நடத்தப்பட்டு வந்தது. நடிகர் மோகன்லால் இந்த ஷோவை நடத்திவந்த நிலையில், ஷோவில் பணிபுரிந்த சிலருக்கு கொரோனா பாதித்ததால் இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆயினும் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில்தான் ஷோ நிறுத்தப்பட்டது.

ஷோ நிறுத்த காரணம்
தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் ஷோ நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம். மேலும் நிலைமை சரியானவுடன் ஷோ மீண்டும் துவங்கப்படும் என்ற உறுதிப்பாட்டையும் ரசிகர்களுக்கு மலையாள பிக் பாஸ் 3 குழு அளித்திருந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வித்தியாச இறுதிப்போட்டி
இந்நிலையில் இந்த ஷோவின் கிராண்ட் இறுதிப்போட்டியை நடத்த முடியாத நிலையில் குழுவினர் உள்ளனர். இதற்கான சூட்டிங்கை தற்போது நடத்துவது சரியாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டு, பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் இதன் இறுதிப்போட்டியை நடத்தி வெற்றியாளரை அறிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

வாக்குகளால் வெற்றியாளர் தேர்வு
இதுகுறித்து டீம் ஒரு டீசரை வெளியிட்டுள்ளது. அதில் மக்களின் வாக்குகளை அடிப்படையாக கொண்டு வெற்றியாளரை தீர்மானிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி ஆன்லைனில் மே 24 முதல் 29 வரையில் வாக்குகளை செலுத்தலாம். இதன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வெற்றியாளர் அறிவிப்பு
இறுதிப் போட்டியாளர்களாக 8 பேர் உள்ள நிலையில் அவர்களை அனைவரில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











