அம்மா ஆகிறார்.. பிக்பாஸில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. ரசிகர்கள் சரமாரி வாழ்த்து!

By

கொச்சி: பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Host? 2020 contestant List

இந்தியில் ஒளிபரப்பாகி, ஏராளமான ரசிகர்களை வசப்படுத்திய டிவி நிகழ்ச்சி, பிக்பாஸ். அங்கு இந்த நிகழ்ச்சியின் பல சீசன் நடந்து முடிந்துள்ளது.

இது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்தியில், இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். 4-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார்.

நடிகை பேர்ள் மானே

நடிகை பேர்ள் மானே

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 4 ஆவது சீசன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தாமதமானது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், நடிகை பேர்லி மானி.

பிக்பாஸ் காதல்

பிக்பாஸ் காதல்

இவர் மலையாளத்தில், த லாஸ்ட் சப்பர், நிஜம், லோகம், டபுள் பேரல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீனிஸ் அரவிந்தைக் காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அப்போது கூறினர்.

கர்ப்பத்துடன் செல்ஃபி

கர்ப்பத்துடன் செல்ஃபி

சொன்னது போலவே கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கிறிஸ்தவ, இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகை பேர்லி மானி, தான் கர்ப்பமாக இருப்பதாக, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை செல்ஃபி வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

தெய்வீகப் பகுதி

தெய்வீகப் பகுதி

அதில், 'இரண்டு வருடத்துக்கு முன் காதலித்தோம். இப்போது அவரது தெய்வீகப் பகுதி எனக்குள் வளர்ந்து வருகிறது. உங்கள் ஆசிர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் சினிமா துறையினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ள இந்த வீடியோவுக்கு சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X