அடக் கருமமே.. என்னடா உள்ளாடை எல்லாம் மாத்தி விடுறீங்க.. பிக் பாஸ் வீட்ல இப்படியெல்லாம் நடக்குதா?

சென்னை: இந்தி பிக் பாஸில் போட்டி போட்டு கிஸ் அடிப்பது, போர்வைக்குள் தாவி குதிப்பது என அலப்பறை கிளப்பி வரும் நிலையில், இன்னொரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளாடையே மாற்றி விடும் கன்றாவி எல்லாம் அரங்கேறி வருவதை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

உலகளவில் ரியாலிட்டி ஷோக்கள் எனும் பெயரில் எல்லை மீறி பல ஆபாச நிகழ்ச்சிகளே அரங்கேறி வருகின்றன.

Bigg Boss: Male contestant helps to change bra for female contestant shocks fans

ஆடையில்லாமல் நிற்கும் ஆண்களையும், பெண்களையும் உடல் பாகங்களை மட்டுமே காட்டி ஜோடியை தேர்ந்தெடுக்கும் வக்கிரம் புடித்த நிகழ்ச்சிகள் வரை ஒளிபரப்பாகி வருகின்றன.

போர்வைக்குள் பாய்ந்து: வெளிநாடுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லா எல்லைகளையும் கடந்து அரங்கேறி வருகின்றன. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலே மாயாவும் பூர்ணிமாவும் ஓரினச்சேர்க்கை கான்செப்ட்டையே கொண்டு வந்து விட்டதாக கமெண்ட்டுகள் குவிகின்றன. சமீபத்தில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரும் ஆண் போட்டியாளரும் போர்வைக்குள் முத்த மழைகளை பொழிந்தும், கசமுசா செய்த காட்சிகளுமே வெளியாகி பகீரை கிளப்பின.

உள்ளாடை மாற்ற உதவி: இந்நிலையில், தற்போது பிரேசில் நாட்டில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாத்ரூம் கூடவா இல்லை என்றும் பெட்ரூமிலேயே ஒரு பெண் போட்டியாளர் உள்ளாடை மாற்ற ஆண் போட்டியாளர் உதவும் காட்சியை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். வெஸ்டர்ன் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி நம்ம ஊரிலும் மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக தப்பான கலாச்சாரத்தை கொண்டு வரும் முயற்சியிலே ஒளிபரப்பாகி வருகிறது என்றும் கமல்ஹாசனும் இதற்கு உடந்தையாக இருக்காரே என கண்டனங்களும் கிளம்பி உள்ளன.

அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்: உள்ளாடை மாற்றி விட உதவி செய்து விட்டு அந்த ஆண் போட்டியாளர் எதையோ சாதித்து விட்டதை போல சந்தோஷப்படுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. இந்த ஸ்க்ரிப்ட்டை கூட கூடிய சீக்கிரமே தமிழில் கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X