வாய் கூசாமல் பொய் சொல்றாராம் சிஎம் விஜய்.. பிக் பாஸ் மஞ்சரி இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய், மே 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில், தமிழ்நாடு கஜானாவை முந்தைய அரசு துடைத்து வைத்துவிட்டு, 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது என்று குற்றச்சாட்டை முன் நிறுத்தினார். இதற்கு பலரும் பலவிதமாக பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மேடைப் பேச்சாளரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் கலந்து கொண்டவருமான மஞ்சரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், பகிர்ந்துள்ளார்.
மஞ்சரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " கஜானா என்றால் நகைகளும் பொற்காசுகளும் பணக்கட்டுகளும் நிரம்பி இருக்கும் மன்னர் காலத்து கஜானா என்று கற்பனையா? புது அரசு செயல்பட நிச்சயம் அவகாசம் தேவைதான். ஆனால், தொடர்ந்து Double Digit GDP வளர்ச்சியுடன் இருக்கும், நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் கஜானா "துடைத்து வைக்கப்பட்டிருக்கு" என்று எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது?

கடன்: பிரச்சனை "கடன் இருக்கிறதா?" என்பதில் இல்லை. அந்த கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பொருளாதாரம் வளருகிறதா?" என்பதில்தான் உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார அளவு இன்று சுமார் ₹35 லட்சம் கோடியை கடந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். மாநிலக் கடன் சுமார் ₹9-10 லட்சம் கோடி இருந்தாலும், நமது கடன் borrowing limit-க்குள் தான் உள்ளது.
எந்த அடிப்படையில்?: "உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும்" என்றால், தேர்தல் அறிக்கை வெளியிடும் போது எந்த தரவின் அடிப்படையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன? அப்போது இருந்த அதே கடன் தான் இப்போதும் இருக்கிறது அல்லவா? உண்மைகள் மக்களை சேராமல் கடன் கடன் என்று உணர்ச்சி வசப்பட்டவர்களாய் மக்களை வைத்திருப்பது என்று தொடங்கலாம், அதே யுக்தியை தொடர முடியாது.

பொறுப்பாக: இப்போதாவது "கடன், காலி கஜானா" என்ற அரசியல் வசனங்களைத் தாண்டி, accountability உடன் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். மக்கள் காரணங்கள் அல்ல, முடிவுகளை தான் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பாக திமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications