“ஜோவை கொலை பண்ணிடலாமா..?” போனில் திட்டம் போட்ட மீரா மிதுன்.. வைரலாகும் புதிய ஆடியோ!
ஜோ மைக்கேலை கொலை செய்து விடலாமா என பிக் பாஸ் மீரா போனில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தன் மீது புகார் கொடுத்த ஜோ மைக்கேலை கொலை செய்து விடலாமா என பிக் பாஸ் மீரா போனில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அழகி போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்ததாக புகாரில் சிக்கியவர் நடிகை மீரா மிதுன். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் வாபஸ் பெறப் பட்டது. ஏற்கனவே பல்வேறு புகார்களில் சிக்கிய மீரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதன் மூலம் மக்களிடையே மேலும் அவர் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் தன் மீதான மோசடி இமேஜை மாற்ற முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக சேரன் மீது அவதூறான புகார் ஒன்றைக் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார்.

சேரன் மீது அவதூறு
இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து அவர் சேரன் மீது அவதூறு பரப்பும் வகையில் தான் பேட்டி அளித்து வருகிறார்.

கொலை செய்ய திட்டம்
இந்நிலையில் மீரா மிதுன் தன் நண்பர் ஒருவருடன் போனில் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் தன் நண்பர் ஒருவருடன் கோபமாக பேசுகிறார். தன் மீது போலீசில் புகார் அளித்த ஜோமைக்கேலை கை, கால்களை உடைத்து ஆறு மாதம் படுக்கையில் இருக்க வைத்துவிடுவோமா? என மீரா தன் நண்பரிடம் கேட்கிறார். அல்லது ஜோவை கொலை செய்து விடுவோமா? அப்போது தான் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மீரா கூறுகிறார்.

ஆடியோவால் பரபரப்பு
ஏற்கனவே மீரா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் கொலை செய்யும் பேசியிருக்கும் இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கைது செய்யப்படுவாரா?
முதலில் பிக் பாஸ் வீட்டில் வைத்தே மீரா கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவயது. ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஒரு வழக்கில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜோவிற்கு கொலை மிரட்டல் அளவிற்கு மீரா பேசியதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ, இந்த வழக்கில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது கூறப்படுகிறது.

உண்மை தானா?
இந்த ஆடியோ குறித்த உண்மை தன்மை இன்னும் தெளிவாகவில்லை. இது மீராவே பேசிய ஆடியோ தானா? அல்லது அவரது எதிரிகள் பரப்பிவிட்ட ஆடியோவா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் விசாரித்த பிறகே உண்மை தெரியவரும்.

நடிக்கும் படங்கள்
மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஷாலினி பாண்டே நடிக்கும் "அக்னி சிறகுகள்" மீரா மிதுன் தற்போது நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "நம்ம வீட்டுப் பிள்ளை" படத்திலும் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











