மன அழுத்தத்தால்… பலமுறை தற்கொலைக்கு முயன்றேன்… மதுமிதா எமோஷனல் ஸ்பீச் !
சென்னை : மாடல் அழகி மதுமிதா மன அழுத்தத்தால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறியுள்ளார்.
Recommended Video
பிக் பாஸ் இல்லத்தில் இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசிவருகின்றனர்.
இதில் முதலாவதாக இசைவாணி, சின்னப்பொண்ணு பேசினார்கள். இதையடுத்து இமான் அண்ணாச்சி மற்றும் ஸ்ருதி இருவரும் தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் குறித்து மனம் திறந்து பேசினர்.

மனதை உருக்கிய நமிதா
4வது நாளான நேற்று நமிதா மாரிமுத்து பேசினார், அப்போது, அன்பு பாசத்துடன் என்னை ஊட்டி வளர்ந்த அம்மா, அப்பா திருநங்கையான பிறகு ஏற்றுக்கொள்ள மறுத்து என்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்று கூறினார். திருநங்கையாக வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் கதறி அழுதபடி கூறினார். நமிதா கதறி அழுதபடி பேசியது அந்த இல்லத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களையும் கதிகலங்க வைத்தது.

பிறந்தது ஜெர்மனியில்
இதையடுத்து பேசிய மதுமிதா, என் பெயர் மதுமிதா ரகுநாதன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனியில் என்றார். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க அவங்க ஆஸ்திரேலியாவில் இருக்காங்க. எனக்கு பேஷன்டிசைன் படிக்கனும்னு ஆசை, பேஷன்டிசைன் பண்ணும்போதுதான் நான் மாடலிங்கிற்கு வந்தேன் என்றார்.

ஆஸ்திரேலியாவில்
அக்காவிற்கு திருமணம் ஆனதும் அக்கா கூடவே நானும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். விசா பிரச்சினையால் மீண்டும் ஜெர்மனி வந்தேன் ஆனால் இங்கு பேஷன்டிசைன் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைவு என்பதால் இன்ஜினியரிங் படித்தேன்.

தற்கொலை முயற்சி
புடிச்ச படிப்பு கிடைக்கல... புடிச்ச வாழ்க்கை கிடைக்கல... இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தற்கொலை செய்து கொள்ள பல நாள் முயற்சியும் செய்து இருக்கேன் என்று கூறினார். மேலும், படபடனு பேசிவிட்டு வெளியே வந்த மதுமிதாவை பிரியங்கா கட்டி அனைத்து கவலைப்படாதே என்று கூறி தேற்றினார்.

நேயர்கள் சோகம்
மதுமிதா ஜெர்மனியில் பிறந்து இருந்தாலும் தமிழ் தட்டுத்தடுமாறி அழகாக பேசினார். அவர் தமிழ் பேசுவது மிகவும் ரசிக்கும் படியும் அழகாக இருந்தது என்று நெட்டிசன்ஸ் கருத்துக்கூறி வருகின்றனர். பாட்டுடன் ஆரம்பித்த பிக் பாஸ் வீடு கண்ணீரில் மூழ்கி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications