ஒரு கிராம் 16 ஆயிரம்.. தங்கம் விலையை கேட்டா வயிறு எரியுது.. முத்துக்குமரன் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றைய 22 காரட் தங்கத்தின்விலை விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,8000க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உயர்ந்துள்ளனர். இதுகுறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டுள்ளார்.

அதில், முன்பெல்லாம் தங்கம் விலை எவ்வளவு என்று பார்ப்பேன். வாங்கவில்லை என்றாலும் விலையை தெரிந்து கொள்வேன். ஆனால், இப்போது தங்கத்தின் விலையை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் விலையை ஏற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடலாம். ஆனால், மூன்று வேலையா விலையை உயர்த்துவார்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை 15,330, அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 400 ரூபாயாக இருக்கிறது.

Gold Muthukumaran
Photo Credit:

முத்துக்குமரன்: பெண் குழந்தை வைத்திருக்கும் அனைவரும் என்ன செய்வார்கள். 20 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கலாம் என நினைத்திருக்கும் பெண்களின் பெற்றோர் என்ன செய்வார்கள். ஜி.எஸ்.டி, செய்கூலி, சேதாரம் என இன்றைய காலகட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஒரு சவரன் தங்கத்தை வாங்க முடியாது. 10 சவரன் நகை போட வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய். 30 சவரன் போட்டு மரியாதையாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய். அவ்வளவு பணத்திற்கு ஒரு சாதாரண நபர் எப்படி சம்பாதிப்பார். சிறுவயதில் எங்க தாத்தா, பாட்டி மூன்று ஆயிரத்துக்கு ஒரு சவரன் நகையை விற்று இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வயிறு எரியுது: தங்கத்தின் விலையை கேட்டா வயிறு கப கபவென எரிகிறது. எதற்காக இவ்வளவு விலை கொடுத்து தங்கம், வெள்ளி வாங்க வேண்டும் என நினைத்தாலும், நமக்கும் தேவைப்படுகிறதே. இதைப்பற்றி யோசிக்கவே வேண்டாம் என நினைத்தாலும், தங்கத்தின் விலையை பற்றிய செய்தியை படிக்கும் போது யோசனை வருகிறதே. நீங்களும் எத்தனை சவரன் நகைகளை விற்று இருக்கீர்கள்? உங்களுக்கு எவ்வளவு வயிற்று எரிச்சலாக இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள் என ஜாலியான ஒரு வீடியோவையும் முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் பலரும் நகையை விற்ற அனுபவத்தை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X