மன்னிப்பு கேட்க முடியாது.. ஏன் கேட்கணும்?.. தக் லைஃப் கமலுக்கு பிக்பாஸ் முத்துக்குமரன் செம சப்போர்ட்
சென்னை: தக் லைஃப் திரைப்படத்துக்கு ஒருசேர ப்ரோமோஷனும், சிக்கலும் எழுந்திருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என அவர் பேச; உடனடியாக அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவிலிருந்து வாள்கள் வர; கமல்ஹாசனோ எதற்கும் அஞ்சாமல் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு பிக்பாஸ் முத்துக்குமரன் சப்போர்ட் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்துக்கு படக்குழுவே நினைத்து பார்த்திடாத ப்ரோமோஷன் கிடைத்திருக்கிறது. தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று சகோதரத்துவத்துடன் கமல்ஹாசன் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாக மாறி நிற்கிறது. முதலில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா இந்த விவகாரத்தில் கமலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சில கன்னட அமைப்புகளும் கண்டனத்தை பதிவு செய்தன.
நீதிமன்றமும் இப்படியா?: ஆனால் கமல்ஹாசனோ அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து படத்தை அந்த மாநிலத்தில் தடை செய்ததற்கு எதிராக நீதிமன்றம் சென்றார் கமல்ஹாசன். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, 'கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா?.. தமிழிலிருந்துதான் கன்னடம் வந்ல்தது என்று எந்த அடிப்படையில் பேசினீர்கள்.

பிரச்னை முடிந்திருக்கும்: இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மட்டும் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். கமலோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது. தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழி வந்ததற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?.. 300 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். பிறகு மன்னிப்பு கேட்பதற்கு என்ன வந்தது?. மன்னிப்பு கேட்க முடியாது என்றால் கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை திரையிட வேண்டாம். விட்டுவிடுங்கள். நானும் இப்படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது" என கூறியிருந்தார்.
கமலின் விளக்கம்: ஒரு மாநிலத்தின் நீதிமன்றமே இப்படிப்பட்ட ஒரு கருத்தை பதிவு செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எனது காலம்முழுவதும் கன்னட மொழி பேசும் மக்கள் எனக்கு அளித்டஹ் அன்பையும் பாசத்தையும் போற்றியிருக்கிறேன். தெளிவான மனசாட்சியுடன் இதனை கூறுகிறேன். இந்த மொழி மீதான அன்பு உண்மையானது. கன்னடர்கள் தங்கள் தாய் மொழி மீது வைத்திருக்கும் அன்பு மீதும் எனக்கு மரியாதை உண்டு. தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம்; தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது?" என்று நெற்றியடியாக கூறியிருந்தார்.
பிக்பாஸ் முத்துக்குமரன் ஆதரவு: சூழல் இப்படி இருக்க கமலுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு அலை பெருகியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் இதுகுறித்து பேசியிருக்கும் வீடியோவில், "மன்னிப்பவன் மனிதன். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். இது கமல் சொன்னதுதானே. ஒரு மன்னிப்பு கேட்பதில் என்ன அவ்வளவு ஈகோ. மன்னிப்பு கேட்கலாமே. இப்படியெல்லாம் ஒரு மாநில உயர் நீதிமன்றமே சொல்கிறது.
எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்: கமல்ஹாசன் பேசிய அந்த வசனத்தின் முடிவில், 'அவன் தவறை உணர்ந்துவிட்டான் அதனால் மன்னிப்பு கேட்கிறான்' என வரும். இந்த விஷயத்தில் கமல் தவறே செய்யவில்லை. பிறகு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் தனது மொழிதான் முக்கியம் என்று கமல்ஹாசன் நிற்கிறார். இந்த நேரத்தில் அவருடன் நாம் அனைவருமே நிற்க வேண்டும். நாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் இருக்கிறோம். ஆனால் தன்மானத்தை இழந்து இருக்கவில்லை" என்றார். அவரது இந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











