Don't Miss!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- News
வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டயாப்பர் சைஸ் வச்சு ஆபாச பேச்சு.. மைனா நந்தினி கணவர் கடும் அப்செட்.. யூடியூபர் பண்ண வேலை!
சென்னை: விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து பிரபலமான மைனா நந்தினி விக்ரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மைனா நந்தினியை சமீபத்தில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றை பார்த்து படு ஆபாசமாக யூடியூபர் ஒருவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதைப் பார்த்த மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் ரொம்பவே அப்செட் ஆகி அந்த யூடியூபரின் யூடியூப் மீது ஸ்ட்ரைக் கொடுக்கவே முடிவு பண்ணியதாக பேட்டி ஒன்றில் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அட்டக் கத்தி அசீம், காமெடி பீஸ் மைனா நந்தினி… Simply Wasted என பங்கமாக கலாய்த்த பிக் பாஸ்!

மைனா நந்தினி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வார முடிவில் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் மைனா நந்தினி. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக விளையாடுவார் மைனா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது சைலன்ட் மோடு கேம் ரொம்பவே ஏமாற்றத்தை அளித்தது. ரச்சிதா போலவே இந்த சீசனில் அதிகம் எதிர்பார்த்து ரசிகர்களை ஏமாற்றிய போட்டியாளராக மைனா நந்தினி மாறினார்.

சில நேரங்களில் சிக்ஸர்
ஆனால், தனக்கு கிடைக்கிற கேப்பில் சில நேரங்களி சிக்ஸர் அடித்தும் சவுண்டு விட்டும் பிக் பாஸ் கேமை சிறப்பாகவே விளையாடி வருகிறார். சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் மைனா நந்தினி அணிந்திருந்த டயாப்பர் பற்றிய மோசமான கமெண்ட் அவரது கணவர் யோகேஷை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

கடுப்பான கணவர்
பிக் பாஸ் பிரபலங்கள் மீதும் அவர்களின் விளையாட்டின்மீதும் ஏகப்பட்ட யூடியூப் சேனல்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதும் ட்ரோல்கள் போடப்படுவதும் வாடிக்கையான ஒன்று தான் என்பதை போட்டியாளர்களே புரிந்து வைத்துள்ளனர். ஆனால், ஒரு சில யூடியூபர்கள் பர்சனலாக மோசமான உருவ கேலியில் ஈடுபடும் போதும் ஆபாச கமெண்ட் அடிக்கும் போது அதற்கு எதிர்வினை ஆற்றாமல் எப்படி இருக்க முடியும். மைனாவின் கணவர் யோகேஷ் இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது.

ஸ்ட்ரைக் கொடுத்திருப்பேன்
அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு செகண்ட்ல ஸ்ட்ரைக் கொடுத்திருப்பேன். அந்த அளவுக்கு கோபம் வந்துடுச்சு.. எப்படி ஒரு பெண்ணை பற்றி அப்படி மோசமாக பேசலாம் என வெளுத்து வாங்கி உள்ளார். யோகேஷின் பேச்சுக்கு பல பிக் பாஸ் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

யூடியூபர் மன்னிப்பு
சம்பந்தப்பட்ட அந்த யூடியூப் சேனலை சேர்ந்தவர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், எங்கே தனது சேனல் ஸ்ட்ரைக்கில் மாட்டி விடுமோ என பயந்து உடனடியாக தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டும் ஒரு வீடியோவை போட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.